Published:Updated:

பாஜக புல்டோசர்: ``2024 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!" - மம்தா

மம்தா பானர்ஜி

`உங்களின் (பா.ஜ.க) அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை நீங்கள் (புல்டோசர் மூலம்) ஒடுக்கலாம் . அதே சமயம் ஜனநாயகத்தின்மீதும் நீங்கள் புல்டோசரைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம்.' - மம்தா

பாஜக புல்டோசர்: ``2024 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!" - மம்தா

`உங்களின் (பா.ஜ.க) அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை நீங்கள் (புல்டோசர் மூலம்) ஒடுக்கலாம் . அதே சமயம் ஜனநாயகத்தின்மீதும் நீங்கள் புல்டோசரைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம்.' - மம்தா

Published:Updated:
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா டுடே ஊடகத்தின், கான்க்ளேவ் ஈஸ்ட் 2022 நிகழ்ச்சியின் சிறப்பு நேர்காணலில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அப்போது 2024 லோக்சபா தேர்தல் குறித்துப் பேசிய மம்தா, ``உங்களின் (பா.ஜ.க) அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை நீங்கள் (புல்டோசர் மூலம்) ஒடுக்கலாம் . அதே சமயம் ஜனநாயகத்தின்மீதும் நீங்கள் புல்டோசரைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம்.

இந்தியா டுடே கான்க்ளேவ் ஈஸ்ட் 2022 நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி
இந்தியா டுடே கான்க்ளேவ் ஈஸ்ட் 2022 நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி

ஆனால், மக்கள் உங்களுக்கு இனி உங்கள் பாணியிலேயே உங்களுக்கு பதிலடி கொடுப்பார்கள். அடுத்து வரும் தேர்தல் பா.ஜ.க Vs மக்கள் என இருக்கும். அப்போது ஜனநாயக முறையில் பா.ஜ.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

மேலும், மகாராஷ்டிரா மாநில ஆட்சிக்கவிழ்ப்பு அரசியல் குறித்துப் பேசிய மம்தா, ``இந்த அரசாங்கம் நீடிக்காது என்று நான் நம்புகிறேன். இது ஒரு நெறிமுறையற்ற, ஜனநாயக விரோத அரசாங்கம். அவர்கள் அரசாங்கத்தை வேண்டுமானால் வென்றிருக்கலாம், ஆனால் மகாராஷ்டிராவின் இதயத்தை வெல்ல முடியாது" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடந்த ஏப்ரலில், டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில், இந்து அமைப்பினரின் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது, அப்பகுதியிலிருந்த முஸ்லிம் சமூகத்தினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் நடந்ததையொட்டி, டெல்லி மாநகராட்சி ஜஹாங்கிர்புரி பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் புல்டோசர் கொண்டு பல கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. இதற்குக் கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சிகள், இதனை பா.ஜ.க-வின் புல்டோசர் அரசியல் என விமர்சிக்கத் தொடங்கின.