Published:Updated:

ராகுல் காந்தி: "2024-ல் மக்களின் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும்" - ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா

``ராகுல் ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தினரையும் திருடர்கள் என்கிறார். ஆனால் அவர் மன்னிப்புக் கேட்க மறுக்கிறார்." - ஜே.பி.நட்டா

Published:Updated:

ராகுல் காந்தி: "2024-ல் மக்களின் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும்" - ஜே.பி.நட்டா

``ராகுல் ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தினரையும் திருடர்கள் என்கிறார். ஆனால் அவர் மன்னிப்புக் கேட்க மறுக்கிறார்." - ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா

2019-ல் நடந்த லோக் சபா தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடியை விமர்சிக்கும்விதமாக, `எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் வருகிறது?' என ராகுல் காந்தி பேசியிருந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது, மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, குஜராத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் நேற்று, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வைச் சாடிவர, பா.ஜ.க-வினரும் பதிலுக்குச் சாடிவருகின்றனர். அந்த வரிசையில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நாட்டாவும், ஒட்டுமொத்த ஓபிசி-யினரையும் ராகுல் காந்தி திருடர்கள் என்கிறார் என்றும், 2024-ல் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஓபிசி சமூகத்தினரை திருடர்களுடன் ஒப்பிடுவதன் மூலம், ராகுல் காந்தி தன் சாதிய மனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். இருப்பினும், அவரின் இத்தகைய செயல் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல் குறித்துப் பேசுவதை அவர் குறைத்துக்கொண்டார். பொய்கள், தனிப்பட்ட அவதூறுகள், எதிர்மறை அரசியல் ஆகியவை அவருக்கு இன்றியமையாதவை.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

2019-ல் காங்கிரஸுக்கு அவர் தலைவராக இருந்தபோது, தேர்தலுக்கு முந்தைய காலத்தில் எங்கு சென்றாலும் ரஃபேல் ஊழல் பற்றியே பேசினார். இதில் தெளிவான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தியின் ஊழல் குற்றச்சாட்டை நம்பவில்லை. மேலும், ராகுல் காந்தி அப்போது மன்னிப்பும் கோரினார்.

ஆனால், 2019-ல் தன் சொந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டும், தேசிய அளவில் காங்கிரஸ் அழிக்கப்பட்டும்கூட, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவர் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். மோடிக்கெதிரான அவரின் அவதூறுகளுக்கு, மூத்த காங்கிரஸ் தலைவர்களே பலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இப்போது, ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தினரையும் திருடர்கள் என்கிறார். ஆனால் அவர் மன்னிப்புக் கேட்க மறுக்கிறார். இது, ஓபிசி-யினர் மீது அவரின் வெறுப்பு எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. 2019-ல் இந்திய மக்கள் யாரும் அவரை மன்னிக்கவில்லை. 2024-ல் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.