Published:Updated:

``ஜனநாயக நாட்டில் மசோதா தொடர்பான சர்ச்சையை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு..!" - ஓம் பிர்லா

ஓம் பிரகாஷ் பிர்லா ( Twitter/@LokSabhaSectt )

"நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவும் தீவிர விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படவில்லை. சில மசோதாக்கள் மீதான விவாதங்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாகவே விவாதிக்கப்பட்டன." - ஓம் பிர்லா

``ஜனநாயக நாட்டில் மசோதா தொடர்பான சர்ச்சையை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு..!" - ஓம் பிர்லா

"நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவும் தீவிர விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படவில்லை. சில மசோதாக்கள் மீதான விவாதங்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாகவே விவாதிக்கப்பட்டன." - ஓம் பிர்லா

Published:Updated:
ஓம் பிரகாஷ் பிர்லா ( Twitter/@LokSabhaSectt )

ஓம் பிர்லா கடந்த ஜூன் 19-ம் தேதி, லோக் சபா சபாநாயகராக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தார். இதனை முன்னிட்டு தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில், ``மூன்றாண்டுகளில் எட்டு நாடாளுமன்ற அமர்வுகளின்போது, ​​அனைத்து உறுப்பினர்களும் ஆக்கப்பூர்வமான பங்கை வகித்து, எனக்கு ஒத்துழைத்தனர். கொரோனா பேரிடர் காலத்திலும் அரசியலமைப்பு கடமைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றினர்.

நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவும் தீவிர விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படவில்லை. சில மசோதாக்கள் மீதான விவாதங்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாகவே விவாதிக்கப்பட்டன. உதாரணமாகக் குடியுரிமை திருத்த மசோதா. இதன் மீதான விவாதம் இரவு வரை நீடித்தது. அரசியல் கட்சிகளின் வெவ்வேறு சித்தாந்தங்கள், அவற்றின் கருத்து வேறுபாடுகள் நமது ஜனநாயகத்தின் சிறப்பியல்பு அம்சமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒரு மசோதாவைக் கொண்டுவருகிறது. பின்னர் விவாதம், பரிந்துரைகள் மற்றும் திருத்தங்கள் ஆகிய நாடாளுமன்ற செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக சர்ச்சையை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. எனவே, சபாநாயகரும் அரசியல் சாசனத்துடன் பிணைக்கப்பட்டவர். அவரால் அரசியலமைப்பை மீறவும் முடியாது. நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது எங்களின் தொடர்ச்சியான முயற்சி. நமது நாடாளுமன்றம் கடந்த காலங்களில் பெரும் விவாதங்களுக்கும், உரையாடல்களுக்கும் சாட்சியாக இருந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே திறனை வளர்ப்பதற்கு வசதியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மசோதாக்கள், மசோதாக்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொது நலன் சார்ந்த விஷயங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு 24x7 சேவையை நாடாளுமன்ற செயலகம் தொடங்கியுள்ளது. ஜூலை இறுதிக்குள், அனைத்து நாடாளுமன்ற உரைகளையும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் டிஜிட்டல் மயமாக்க உள்ளோம். இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விவாதம் மற்றும் உரையாடல் திறன்களை வளர்த்துக்கொள்ள இது உதவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த சித்தாந்தம் உள்ளது. எந்தெந்த பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சட்டமன்றத்தை எந்தளவுக்குப் பலப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நிறைவேற்றும் சட்டம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். அதனால்தான், கடுமையான பிரச்னைகளில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டும் என்று நான் சபை உறுப்பினர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.