Published:Updated:

5-ல் 4 எம்.எல்.ஏ-க்கள் லாலு கட்சியில்...ஒவைசி ஷாக் - பீகார் சட்டப்பேரவையில் பெரிய கட்சியானது ஆர்ஜேடி

அசாதுதீன் ஒவைசி ( ட்விட்டர் )

ஒவைசி கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ-க்களில் நான்கு பேர், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு மாறியிருப்பது ஒவைசிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

5-ல் 4 எம்.எல்.ஏ-க்கள் லாலு கட்சியில்...ஒவைசி ஷாக் - பீகார் சட்டப்பேரவையில் பெரிய கட்சியானது ஆர்ஜேடி

ஒவைசி கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ-க்களில் நான்கு பேர், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு மாறியிருப்பது ஒவைசிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி ( ட்விட்டர் )

பீகார் மாநிலத்தில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில், பாஜக, ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி, சரியாக ஆட்சியமைக்கத் தேவையான 127 இடங்களுடன் ஆட்சி செய்துவருகிறது. இதில் எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 92 இடங்களுடன் சட்டமன்றத்தில் இருக்கிறது. மீதமுள்ள 24 இடங்களில் காங்கிரஸ் 19 இடங்களுடனும், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 5 இடங்களுடனும் இருந்தன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி)
ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி)

இந்த நிலையில், ஒவைசி கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ-க்களில் நான்கு பேர், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு மாறியிருப்பது ஒவைசிக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பலம் 76-லிருந்து 80-ஆக மாறியுள்ளது. மேலும் பீகாரில் நேற்றுவரை அதிக இடங்களை வென்ற கட்சியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் 77 இடங்களுடன் இருந்த பாஜக-வைப் பின்னுக்குத் தள்ளி 80 இடங்களுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முன்னணியில் உள்ளது. இருப்பினும் கூட்டணியாக தேசிய ஜனநாயகல் கூட்டணிதான் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ்
பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ்

ஒவைசி-யின் நான்கு எம்.எல்.ஏ-க்கள் தனது கட்சிக்கு மாறியதையடுத்து பேசிய மாநில எதிர்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ``நான்கு எம்.எல்.ஏ-க்களும் சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை என்ற எங்கள் இலக்கை நோக்கிச் செயல்படுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சீமாஞ்சல் மக்களின் அன்பை நாங்கள் எப்போதும் பெற்றிருக்கிறோம். சீமாஞ்சலில் எங்கள் கட்சி மீண்டும் நல்ல முன்னிலையில் இருக்கிறது" என்று கூறினார்.