Published:Updated:

`இனி வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் தடுப்பு சட்டம்!’ - தீவிரம் காட்டும் வணிக வரித்துறை

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

வரி ஏய்ப்பு செய்வோர் ஐ.டி உதவியுடன் பலவகையான ஏமாற்று வழிகளைக் கையாண்டு அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல் ஏமாற்றிவருகின்றனர். இவர்களைக் கண்டுபிடிக்க உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் வணிக வரித்துறைக்கு வரவேண்டிய 26,000 கோடி ரூபாய் வரி நிலுவையில் உள்ளது. வருடத்துக்கு சுமார் 98 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தருகிறது வணிக வரித்துறை. நிலுவையிலுள்ள தொகையை எப்படி வசூலிப்பது என்று தமிழக அரசின் நிதித்துறை தரப்பில் ஆலோசனை நடந்ததாம். அதற்கு `ஒருமுறை தீர்வு திட்டம்’ என்கிற வகையில் பாக்கி வைத்திருப்பவர்களை அழைத்துப் பேசி, வரியை வசூலிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதேநேரம், வரி ஏய்ப்பு செய்கிறவர்களை கிடுக்கிப்பிடியில் கொண்டுவரவும் தனித் திட்டத்தை துறை அமைச்சர் மூர்த்தி வடிவமைத்துக் கொடுத்திருப்பதாகத் தகவல்.

முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி
முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி

இது பற்றி வணிக வரித்துறை, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டபையில் பேசும்போது, ``மாநில அரசின் வருவாயில் சுமார் 87 சதவிகிதப் பங்கை வணிக வரித்துறையும் பத்திரப்பதிவுத்துறையும் தந்துவருகின்றன. ஆனால், வணிக வரித்துறையில் வரி ஏய்ப்பு சம்பவங்களும், போலிப் பட்டியல் தயாரிப்புகளும் நடக்கின்றன. வணிகர்களில் பெரும்பாலானோர் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தி, நேர்மையான வணிகம் செய்வதை விரும்புகின்றனர். ஆனால், வணிகர்கள் என்ற போர்வையில் சிலர் சரக்கு அல்லது சேவைகளின்றி விலைப்பட்டியலை மட்டுமே தயாரித்து பயனாளிகளுக்குத் தயறான முறையில் உள்ளீட்டு வரிவரவை மாற்றுவதன் மூலமாக அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்திவருகின்றனர்.

இனி இந்த மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்... ஆனால், கூடுதல் கட்டணம்!

போலிப் பட்டியல் தயாரிப்பது என்பது வணிகச் சமூகத்தில் ஒரு புற்றுநோயாக விரிந்து பரந்து, நேர்மையான வணிகத்துக்கு அபாயம் விளைவிப்பதாக அமைய வாய்ப்பிருக்கிறது. எனவே, போலிப் பட்டியல் தயாரிக்கும் வணிகர்களைக் கண்டறிந்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கிறது. சரக்கு இல்லாமல் பட்டியல் கொண்டு செல்வது, பட்டியல் இல்லாமல் சரக்கு கொண்டு செல்வது ஆகியவை வணிக வரித்துறைக்கு பெரும் சவாலாக உள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் போலிப் பட்டியல் தயாரிக்கும் நபர்களின் மீது சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய நபர்களைக் கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

எனவே, போலிப் பட்டியல் தயாரிப்போர் உட்பட அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குண்டர் சட்டத்தில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு முடிவு செய்திருக்கிறோம். வரி ஏய்ப்பு செய்வோர் ஐ.டி உதவியுடன் பலவகையான ஏமாற்று வழிகளைக் கையாண்டு, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் ஏமாற்றிவருகின்றனர். இவர்களைக் கண்டுபிடிக்க உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. வரி ஏய்ப்பு குற்ற தடுப்பு நடவடிக்கைகளைக் காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அறிவித்திருக்கிறார்.

வணிக வரி ஏய்ப்பு
வணிக வரி ஏய்ப்பு

அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான நடவடிக்கையிலும் தீவிரம்காட்டிவருகிறாராம் அமைச்சர் மூர்த்தி. மாநில உள்துறை உயரதிகாரிகளுடன் பேசி வரி ஏய்ப்பு செய்பவர்கள், அதற்குத் துணை போகிறவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தயாராகிவருகிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு