Published:Updated:

கடலூர்: கிராமசபைக் கூட்டத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பெண் ஊராட்சி துணைத் தலைவர் கைது!

கிராமசபைக் கூட்டம்

கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை, ஊராட்சி மன்ற பெண் துணைத் தலைவர் செருப்பால் அடித்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர்: கிராமசபைக் கூட்டத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பெண் ஊராட்சி துணைத் தலைவர் கைது!

கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை, ஊராட்சி மன்ற பெண் துணைத் தலைவர் செருப்பால் அடித்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கிராமசபைக் கூட்டம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நேற்று மதியம் 12 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாசி கலியமூர்த்தி, ஊராட்சிச் செயலர் சங்கர் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் எனச் சுமார் 300 பேர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகள், பொதுமக்கள் கோரிக்கை போன்றவை விவாதிக்கப்பட்டன.

துணைத் தலைவர் சரண்யா குமார்
துணைத் தலைவர் சரண்யா குமார்

தொடர்ந்து விவசாயத்துக்கான கடன்கள் குறித்த விவரங்களை தெரிவித்த வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு அடையாளை அட்டைகளை வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்து எழுந்த ஊராட்சி துணைத் தலைவர் சரண்யா குமார், கிராம மக்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அங்கிருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை அடித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்தச் சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியாகி நிற்க, அங்கிருந்து வெளியேற முயன்றார் துணைத் தலைவர் சரண்யா குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கதவுகளை இழுத்து மூடி அவரை சிறைப் பிடித்ததுடன், காட்டுமன்னார்கோவில் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதையடுத்து அங்கு சென்ற சேத்தியாத்தோப்பு சரக காவல் டி.எஸ்.பி சுந்தரம் உள்ளிட்ட போலீஸார், பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கண்டமங்கலம் கிராம சபைக் கூட்டம்
கண்டமங்கலம் கிராம சபைக் கூட்டம்

அதேசமயம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரைத் தாக்கிய ஊராட்சி துணைத் தலைவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென்று, கண்டமங்கலம் கிராம மக்களும், ஊராட்சி மன்ற ஊழியர்களும் சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அதையடுத்து சரண்யா குமாரை அங்கிருந்து அழைத்துச் சென்ற போலீஸார், காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதிக்கப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், பொதுமக்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீஸார் சரண்யா குமாரைக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ``கடந்த மார்ச் 7-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவர் சரண்யா குமார் ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது குறித்து நான் விசாரித்துக் கொண்டிருந்தபோது யாருக்கும் தெரியாமல் அதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

இவரின் கணவர் ஊராட்சி தொடர்பாக ஏற்கெனவே அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டவர். மறுபடியும் அதேபோல நடந்துவிடக் கூடாது என்பதால் அங்கிருந்த ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் அவரை எச்சரித்துவிட்டுச் சென்றுவிட்டேன். அதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரின் முன்னிலையிலும் என்னைப் பழிவாங்கும் எண்ணத்தில் காத்திருந்து தற்போது செருப்பால் அடித்துவிட்டார்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism