Published:Updated:

``என்னை ஆட்டோவில் வந்து அழைத்துச் செல்லுங்கள்!" - உணவருந்த அழைத்தவரை நெகிழவைத்த கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கக் கூட்டத்தில் கெஜ்ரிவால் இன்று கலந்துகொண்டார்.

``என்னை ஆட்டோவில் வந்து அழைத்துச் செல்லுங்கள்!" - உணவருந்த அழைத்தவரை நெகிழவைத்த கெஜ்ரிவால்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கக் கூட்டத்தில் கெஜ்ரிவால் இன்று கலந்துகொண்டார்.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பா.ஜ.க-வைத் தொடர்ந்து விமர்சித்துவரும் அதே வேளையில், அடுத்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் தொடர்ச்சியாக பல பேரணிகளை நடத்தி வருகிறார். அதோடு இப்போதே தேர்தல் குறித்த இலவச வாக்குறுதிகளையும் அறிவிக்க தொடங்கிவிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கக் கூட்டத்தில் கெஜ்ரிவால் இன்று கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், ``டெல்லியைப் போலவே இங்கிருப்பவர்களும், தங்கள் பயணிகளை ஊக்குவிப்பதன் மூலம் குஜராத்திலும் வெற்றிபெற உதவவேண்டும்" என ஆட்டோ ஓட்டுநர்களிடம் வலியுறுத்தினார்.

ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுநர்

கெஜ்ரிவாலின் இந்த உரைக்குப் பிறகு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒருவர் எழுந்து, ``நான் உங்களின் தீவிர ரசிகன். பஞ்சாப்பில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வீட்டில் நீங்கள் இரவு உணவு சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளங்களில் நான் பார்த்தேன். எனவே இன்று, இரவு உணவுக்கு எங்கள் வீட்டுக்கும் வருவீர்களா?" என்று கெஜ்ரிவாலிடம் கேட்டார்.

 அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரின் கோரிக்கைக்குப் பதில் அளித்த கெஜ்ரிவால், ``எத்தனை மணிக்கு வரவேண்டும். இன்றிரவு நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்து என்னை உங்களுடைய ஆட்டோவில் அழைத்துச் செல்கிறீர்களா?" என்று ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டார். அதன் பிறகு இரவு உணவு 8 மணிக்கு முடிவு செய்யப்படிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஆட்டோ ஓட்டுநரும் கெஜ்ரிவாலும் பேசிக்கொள்ளும் இந்த உரையாடலை ஆம் ஆத்மி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.