Published:Updated:

"உங்கள் வீட்டு நாயாவது நாட்டுக்காக இறந்ததா?" - சாடிய கார்கே, கண்டித்த பாஜக -மாநிலங்களவையில் சலசலப்பு

மல்லிகார்ஜுன கார்கே ( ட்விட்டர் )

``கார்கேவின் கருத்துகள், புண்படுத்தக்கூடிய வார்த்தைகளை அவர் பயன்படுத்தியவிதம், பொய்யைப் பரப்ப முயன்றவிதம் ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்." - பாஜக

"உங்கள் வீட்டு நாயாவது நாட்டுக்காக இறந்ததா?" - சாடிய கார்கே, கண்டித்த பாஜக -மாநிலங்களவையில் சலசலப்பு

``கார்கேவின் கருத்துகள், புண்படுத்தக்கூடிய வார்த்தைகளை அவர் பயன்படுத்தியவிதம், பொய்யைப் பரப்ப முயன்றவிதம் ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்." - பாஜக

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே ( ட்விட்டர் )

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையை, `பாரத் டோடோ' (இந்தியாவைப் பிரித்தல்) என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடுத்த பதில் விமர்சனம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளியை ஏற்படுத்தியது.

அதாவது, ராஜஸ்தானில் நேற்று பேரணியில் பேசிய கார்கே, ``நாட்டுக்கு காங்கிரஸ் சுதந்திரம் பெற்றுத்தந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தனர்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
ட்விட்டர்

ஆனால், உங்கள் (பா.ஜ.க) வீட்டு நாயாவது நாட்டுக்காக உயிரிழந்ததா... இருந்தாலும் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் தேசவிரோதிகள் என்று அழைக்கப்படுகிறோம்" என்று பா.ஜ.க-வைத் தாக்கிப் பேசினார். இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று கூட்டம் தொடங்கியதுமே பா.ஜ.க தரப்பினர் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்கவேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``கார்கேவின் கருத்துகள், புண்படுத்தக்கூடிய வார்த்தைகளை அவர் பயன்படுத்தியவிதம், பொய்யைப் பரப்ப முயன்றவிதம் ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப் தன்கர், ``இது நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த விவகாரம்" என்று கூறிவிட்டார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதையடுத்து பா.ஜ.க-வின் வலியுறுத்தலை கேலிசெய்த கார்கே, ``சுதந்திரப் போராட்டத்தின்போது மன்னிப்புக் கேட்டவர்கள், சுதந்திரத்துக்காகப் போராடியவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாட்டுக்காக யார் தியாகம் செய்தார்கள் என்று உங்களுக்கே தெரியும்" என்று கூறினார்.

பின்னர் கார்கேவுக்கு பதில் பேச்சை முன்வைத்த பியூஷ் கோயல், ``அவர்களுக்குத் தங்களின் வரலாறு நினைவில் இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்களை அவமதித்ததால் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலை, பாகிஸ்தானின் அச்சுறுத்தல், சீனாவின் ஆக்கிரமிப்பு போன்றவை அவர்களுக்கு நினைவில் இல்லை" என்று தெரிவித்தார். இத்தகைய காரசாரமான வார்தைப்போரால் மாநிலங்களவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.