Published:Updated:

`கொரோனாவுக்குப் பின் ஞாபக மறதி’... விசாரணையில் டெல்லி அமைச்சரின் பதில் - விமர்சித்த மத்திய அமைச்சர்

சத்யேந்தர் ஜெயின் ( ட்விட்டர் )

``தங்களது நினைவை இழந்தவர்கள் எப்படி அரசாங்கத்தில் தொடர்ந்து அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது." - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

`கொரோனாவுக்குப் பின் ஞாபக மறதி’... விசாரணையில் டெல்லி அமைச்சரின் பதில் - விமர்சித்த மத்திய அமைச்சர்

``தங்களது நினைவை இழந்தவர்கள் எப்படி அரசாங்கத்தில் தொடர்ந்து அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது." - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Published:Updated:
சத்யேந்தர் ஜெயின் ( ட்விட்டர் )

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், பண மோசடி வழக்கில் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் சத்யேந்தர் ஜெயின் வசம் இருந்த சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள், டெல்லி துணை முதல்வரான சிசோடியாவுக்கு மாற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் 1.8 கிலோ தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதிலிருந்து தற்போதுவரை அமலாக்கத்துறையின் காவல் கட்டுப்பாட்டிலேயே சத்யேந்தர் ஜெயின் சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயினின் வழக்கு தொடர்பான விசாரணை டெல்லியிலுள்ள நீதிமன்றத்தில், நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

இந்த விசாரணையின்போது, சத்யேந்தர் ஜெயின் கொரோனாவுக்கு பின் தான் ஞாபகசக்தியை இழந்துவிட்டதாகக் கூறினார் என்பதாக அமலாக்கத்துறையால் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், சத்யேந்தர் ஜெயினின் இத்தகைய பதில் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். டெல்லியில் நேற்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், ``தங்களது நினைவை இழந்தவர்கள் எப்படி அரசாங்கத்தில் தொடர்ந்து அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அத்தகைய அமைச்சர்களை கெஜ்ரிவாலே வைத்திருக்கிறார்" என விமர்சித்தார்.

மேலும், நீதிமன்றத்தில் நேற்று ஜெயின், அமலாக்கத்துறையின் வாதங்களைக் கேட்ட நீதிபதி கீதாஞ்சலி கோயல், ஜெயினின் ஜாமீன் மனு தீர்ப்பை ஒத்திவைத்து, ஜூன் 18 வரை காவலில் இருக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism