Published:Updated:

ப.சிதம்பரம் கைது பின்னணி: காத்துவந்த ஜெட்லி நட்பு, முனைப்பு காட்டிய ஆர்.எஸ்.எஸ்!

விகடன் டீம்

இந்தியப் பொருளாதாரச் சரிவு அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திவந்தது. பொருளாதாரச் சரிவு விவகாரத்தைவைத்து தொடர்ந்து எதிர்ப்புப் பிரசாரத்தைக் கையாண்டுவந்தார் சிதம்பரம்

p chidambaram
p chidambaram

"சுதந்திரமா... உயிரா என்றால், நான் சுதந்திரத்தையே தேர்வுசெய்வேன்"- கைது செய்யப்படுவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகத்தில் விரக்தியின் உச்ச மனநிலையில் சொன்னார் ப.சிதம்பரம். அந்தப் பேட்டிக்கு முன்பான பரபரப்பு மிகுந்த 24 மணி நேர கெடுபிடிக் காட்சிகள்தான் அதற்குக் காரணம். 'காங்கிரஸ் கட்சியின் சூத்திரதாரி' என்று இந்திய ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் பிம்பத்தை, ஒரே நாளில் சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டது மத்திய பி.ஜே.பி அரசு! https://bit.ly/2Zl1k31

இதுகுறித்து உள்விவரங்கள் அறிந்த டெல்லி சோர்ஸ்களிடம் பேசினோம். "கடந்த ஆண்டு முதலே வழக்குகளில் சிதம்பரம் சிக்கிவந்தாலும், கைது நடவடிக்கை வரை போகாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் பி.ஜே.பி-யின் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தரப்புக்கும் சிதம்பரத்துக்கும் இடையேயான திரைமறைவு நட்பு. குறிப்பாக, ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் சிதம்பரத்திடம் சில ஆலோசனைகள் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தது ஜெட்லி தரப்பு. இந்த விவரம் மோடிக்குத் தெரிந்தாலும் மூத்த தலைவரான ஜெட்லிமீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது. இதையே நாசுக்காக இப்போது பிரதமரிடம் பற்றவைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

p chidambaram
p chidambaram

சிதம்பரம் மீது இப்போது எந்த நடவடிக்கை எடுத்தாலும், ஜெட்லி தரப்பு தடுக்கும் நிலையில் இல்லை. ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை வாய்ப்பாக கையிலெடுத்த சுவாமி, சொல்ல வேண்டியதை... சொல்ல வேண்டியவிதத்தில் பிரதமரிடம் சொல்லிவிட்டார்.

"இன்னொரு பக்கம் சிதம்பரத்தை சிறைக்கு அனுப்புவதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் முனைப்பு காட்டியது. காஷ்மீர், அயோத்தி விவகாரம் அனைத்தும் பி.ஜே.பி-க்குச் சாதகமாகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பொருளாதாரச் சரிவு அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திவந்தது. பொருளாதாரச் சரிவு விவகாரத்தைவைத்து தொடர்ந்து எதிர்ப்புப் பிரசாரத்தைக் கையாண்டுவந்தார் சிதம்பரம்.

எல்லாம் கைகூடவே, இதற்கான திட்டம் தயார்செய்யப்பட்டு வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றில் இருக்கும் பி.ஜே.பி விசுவாச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

'அடுத்த சில மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கப்போகிறது' என்று சிதம்பரம் பொதுவெளியில் பேசிவந்தது ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிதம்பரத்தின் கருத்து, பொதுவெளியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உளவுத்துறையும் எச்சரித்தது. இந்த நேரத்தில் சுவாமியும் சிதம்பரத்துக்கு எதிராக வரிந்துகட்டி நின்றார். எல்லாம் கைகூடவே, இதற்கான திட்டம் தயார்செய்யப்பட்டு வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றில் இருக்கும் பி.ஜே.பி விசுவாச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

> ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி, ப.சிதம்பரத்தை சிக்கவைக்க சுப்பிரமணியன் சுவாமி செய்த அதிரடிகள், 24 மணிநேர நாடகம் உள்ளிட்டவற்றை முழுமையாக ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியில் வாசிக்க > https://www.vikatan.com/government-and-politics/politics/cbi-arrests-p-chidambaram-for-inx-media-case

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/