Published:Updated:

கள்ளக்குறிச்சி: `ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்!’ - தண்டோரா போட்டதால் களமிறங்கிய காவல்துறை

ஏலம் விடப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவி
ஏலம் விடப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவி

கோயில் பராமரிப்பு மற்றும் திருவிழாவுக்காக ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்காக தண்டோரா போட்ட நிலையில் கள்ளக்குறிச்சி காவல்துறை களமிறங்கியதால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்று விட்டது. எனினும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அப்போது தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்

அதையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் முடுக்கி விட்டிருக்கும் நிலையில், எப்படியாவது பதவிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. இந்நிலையில்தான் கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ள கரடி சித்தூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுவதற்காக முடிவு செய்தது ஒரு தரப்பு. அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் பராமரிப்பு பணி மற்றும் தேர் திருவிழா நடத்துவதற்கான செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நேற்று முன் தினம் இரவு கிராமம் முழுவதும் தண்டோரா போட்டிருக்கிறார்கள்.

அதையடுத்து நேற்று காலை குறிப்பிட்ட அந்த கோவில் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் வாக்களிப்பு முறையில் தான் ஊராட்சி தேர்தல் தலைவர் யார் என முடிவு செய்ய வேண்டுமே தவிர ஏலம் விட நீங்கள் எப்படி முடிவு செய்யலாம் என்று கேள்வி எழுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது.

வாரியம்... வாரிசு... வாக்குறுதிகள்.. உள்ளாட்சித் தேர்தல்... ‘கிறுகிறு’ ஸ்டாலின்!

அதற்குள் இந்த தகவலை கேள்விப்பட்டு அங்கு சென்ற காவல்துறையினர் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக், “ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட இருப்பதாக தகவல் வந்ததையடுத்து காவல்துறையினர் அங்கு சென்றார்கள். ஆனால் அதுகுறித்து யாரும் எங்களிடம் புகாரளிக்கவில்லை. இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என எச்சரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு