Published:Updated:

அதிரடியில் இறங்கிய கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை! - கலக்கத்தில் ரெளடிகள்

வெள்ளத்துரை
News
வெள்ளத்துரை

காஞ்சிபுரத்துக்கு வந்தவர் ரௌடிகள் லிஸ்ட்டை அலசி ஆராய்ந்து, ரகசிய விசாரணையில் இறங்கியிருக்கிறார்

சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் கொடிகட்டிப்பறப்பதாக போலீஸாருக்கு புகார்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகின்றன. இந்தக் குற்றச் சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கும் ரௌடிகளை ஒடுக்குவதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டிருக்கிறது. அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுன்டர், சந்தனகடத்தல் வீரப்பன் என்கவுன்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்டர் ஆபரேஷன்களில் வெள்ளத்துரை பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 7-ம் தேதியன்று இந்த புதிய பொறுப்பில் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்தவர் ரௌடிகள் லிஸ்ட்டை அலசி ஆராய்ந்து, ரகசிய விசாரணையில் இறங்கியிருக்கிறார்.

அதில், ரௌடிகளுக்கு ஆதரவாக சில போலீஸாரும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. சுங்குவார்சத்திரம் அருகே ஒரு பெண்ணொருவருக்கு சொந்தமான இடத்தை படப்பை அடைமொழியை கொண்ட ரௌடி ஒருவரை ஏவி மிரட்டி போலீஸ்காரர் ஒருவர் வாங்கியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பலமுறை போலீஸுக்கு அலைந்தும் ஏதும் நடக்கவில்லை. இந்த தகவலை கேள்விப்பட்ட கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை, அவரை அழைத்து நடந்ததை விசாரித்திருக்கிறார். அந்த போலீஸ்காரர் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, உடனே வழக்கு பதிவு செய்து அவரை பிடித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார் .

வெள்ளத்துரை
வெள்ளத்துரை

படப்பையை அடைமொழியாக கொண்ட அந்த ரௌடி, வெள்ளத்துரை வந்த தகவல் அறிந்து தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில், டிசம்பர் 29-ம் தேதியன்று பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்த அந்த நபர், தனது 6 ஏக்கர் நிலத்தை இன்னொருவருக்கு விற்றுவிட்டுப்போயிருக்கிறார். அவர் சர்வசாதரணமாக நடமாடுவதை கேள்விப்பட்ட வெள்ளத்துரை, படப்பை ரெளடியைப் பிடிக்கத் தீவிரமாகிவிட்டார்.

வெள்ளத்துரையின் வருகை ரௌடிகளுக்கு மட்டுமல்ல... ரௌடிகளுக்கு உதவிய போலீஸாருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz