Published:Updated:

``நம்மூர் விஞ்ஞானி ஜெயிலுக்குச் செல்வது உறுதி" - செந்தில் பாலாஜியைச் சாடிய எம்.ஆர்.விஐயபாஸ்கர்

கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஸ்மார்ட் மீட்டர் என்ற பெயரில் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்ய வேலைகள் நடந்துவருவதாக, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

``நம்மூர் விஞ்ஞானி ஜெயிலுக்குச் செல்வது உறுதி" - செந்தில் பாலாஜியைச் சாடிய எம்.ஆர்.விஐயபாஸ்கர்

ஸ்மார்ட் மீட்டர் என்ற பெயரில் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்ய வேலைகள் நடந்துவருவதாக, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Published:Updated:
கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழ்நாடு முழுவதும் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கரூர் புலியூர் பகுதியில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அ.தி.மு.க போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், "தமிழக மக்களை ஏமாற்றிய மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளைக் கேட்டறிவதாக, ஒரு நாடகத்தை நடத்தி பெட்டி பெட்டியாக மனுக்கள் வாங்கினார். தற்போது அந்தப் பெட்டியின் சாவியை மறந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து, ஸ்டாலின் மகனும் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக நாடகமாடினார். தற்போதும் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று மக்களிடம் பொய் கூறி ஏமாற்றிவருகிறார்.

இங்கு ஓர் அமைச்சர் இருக்கினறார். ஏற்கெனவே அவர் விஞ்ஞானரீதியான முறையில் முறைகேடு செய்ததாக, தற்போதைய முதல்வர் அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆனால், அவருக்கே தற்போது அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அங்கேயும் கிச்சன் கேபினெட் முறையில் பதவி வாங்கிவருகிறார். மு.க.ஸ்டாலின் மருமகனைப் பிடித்து தற்போது அமைச்சர் பதவியைப் பிடித்திருக்கிறார். நமது எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே சொன்னதுபோல சொத்து வரியை ஏற்றிவிட்டார்கள், மின்சாரக் கட்டணம் விலை உயர்வு மக்களுக்கு அடுத்த தி.மு.க அரசின் பம்பர் பரிசு. பஸ் கட்டண உயர்வு அடுத்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், போக்குவரத்துத்துறையில் மெஷின்களில் முறைகேடு செய்து பல கோடி சுருட்டிய நம்மூர் விஞ்ஞானி (செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு) தி.மு.க-வுக்குச் சம்பாதிப்பதற்காக, அடுத்து மின்சாரத்துறையில் ஓவ்வொரு வீட்டுக்கும், மின்கட்டணத்தை அறியும் மீட்டரில் டிஜிட்டல் முறை என்று கூறி ஸ்மார்ட் மீட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கோடிகளைச் சுருட்ட பிளான் செய்திருக்கிறார். ஆனால், ஏற்கெனவே போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்ததைத் தற்போது உச்ச நீதிமன்றமே தூசு தட்டி எடுத்து விசாரணை நடத்திவருகிறது.

நிகழ்ச்சிக்கு வந்த கூட்டம்
நிகழ்ச்சிக்கு வந்த கூட்டம்

ஆகையால், நம்மூர் விஞ்ஞானி விரைவில் ஜெயிலுக்குச் செல்வது உறுதி. நம் கட்சியை அழிக்க தி.மு.க கட்சி சதி செய்துவருகிறது. நம் அ.தி.மு.க கட்சி எப்போதும் ஒற்றைத் தலைமைதான் அது, எடப்பாடி மட்டுமே. ஒரு சிலர் தர்மயுத்தம் என்று சொல்லி நாடகமாடினார்கள். உண்மைத் தொண்டர்கள் நம் இயக்கத்தின் விரோதிகளான தி.மு.க கட்சியுடன் உறவாட மாட்டார்கள். தி.மு.க கட்சியையும், ஆட்சியையும் புகழ்ந்து சொல்பவர்கள் நம் இயக்கத்துக்கு துரோகம் செய்பவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அன்றே சொன்னார். தீயசக்தி கருணாநிதி, தி.மு.க என்றுமே மக்களுக்கு எதிரானவர்கள். அவரின் கூற்றுக்கும், நம் புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்துவிட்டு, அவர்களோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளவர்களும் நம் இயக்கத்துக்கு எதிரானவர்கள்தான். அதேபோல், எக்காரணத்தைக் கொண்டும் மன்னார்குடிக் கும்பல் சசிகலாவுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்த பன்னீர்செல்வம், இன்று மன்னார்குடிக் கும்பலுடன் தொடர்பில் இருப்பதோடு, தேவைப்பட்டால் டி.டி.வி.தினகரனையும் சசிகலாவையும் சந்திப்பேன் எனக் கூறிவருகிறார்" என்றார்.