Published:Updated:

கொடநாடு வழக்கு: எஸ்டேட் மேனேஜரிடம் 2 மணி நேரத்துக்கு மேல் நடந்த ரகசிய விசாரணை! - அடுத்து என்ன?

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கொடநாடு சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இரண்டைரை மணி நேரம் ரகசிய விசாரணை நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொடநாடு கொலை ,கொள்ளை வழக்கில் காவல்துறை தரப்பில் தற்போது கூடுதல் புலன் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு, சாட்சிகள் தரப்பு என இரண்டு தரப்பிலும் கூடுதல் விசாரணையை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சயானிடம் கடந்த 17-ம் தேதி காவல்துறையினர் சுமார் மூன்று மணி நேரம் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். சயானின் வாக்குமூலம் நீதின்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமி முதல் கூடலூர் மர வியாபாரி வரை பலரையும் பதற்றத்தில் வைத்துள்ளது.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் நடந்த தினத்தன்று இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில், கொடநாடு வழக்கு விசாரணை ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் விசாரணையைத் தொடர மேலும் நான்கு வாரகால அவகாசம் கேட்டு காவல்துறை தரப்பில் முறையிடப்பட்டது. நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு அடுத்த மாதம் ஒன்றாம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது

இந்தப் புலன் விசாரணையில் அடுத்தகட்ட திருப்பமாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை ஊட்டிக்கு வரவழைத்து, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இரண்டைரை மணி நேரம் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

இந்த விசாரணை குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள கூடுதல் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் இன்று காலை 10:30 மணியளவில் விசாரணை தொடங்கியது. அவருடைய வழக்கறிஞர் ராஜ்குமாரும் விசாரணையில் பங்கேற்றார். ஊட்டியிலுள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தில் நடந்த விசாரணை, விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. பகல் 1 மணிக்கு விசாரணை முடிந்தது. தேவைப்பட்டால் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் செய்தியாளர்களிடம் பேச மறுத்த நிலையில், அவருடைய வழக்கறிஞர், ``விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம்" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

கொடநாடு: எஃப்.ஐ.ஆர்-ல் வெட்டுக்காயம்; உடற்கூறாய்வில் மூச்சுத்திணறல்! - காவலாளி கொலையில் சர்ச்சை?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு