Published:Updated:

கொடநாடு விவகாரம்: சயானுக்கு விரைவில் பாதுகாப்பு... `தங்க குருவாயூரப்பன்’ எங்கே?

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

கொடநாடு பங்களாவில் உள்ள அனைத்து வழிப்பாதைகளையும் அறிந்த ஆளுங்கட்சி பிரமுகர் பற்றிய சில முக்கியமான தகவல்களை சயான் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், சயானுக்கு மிரட்டல் வரலாம் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானுக்கு விரைவில் போலீஸ் பாதுகாப்பு வழங்க இருக்கிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய கோத்தகிரி கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் வருடம் ஏப்ரல் 24-ல் கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்ளிட்ட 10 பேர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சயான்
சயான்

சயான் ஜாமினில் உள்ளார். இதற்கிடையே, நீலகிரி எஸ்.பி தலைமையிலான டீம், சயானை நேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணையை வீடியோவில் பதிவு செய்தனர். கொடநாடு பங்களாவில் உள்ள அனைத்து வழிப்பாதைகளையும் அறிந்த ஆளுங்கட்சி பிரமுகர் பற்றிய சில முக்கியமான தகவல்களை சயான் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், சயானுக்கு மிரட்டல் வரலாம் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர். அவருக்குப் பாதுகாப்பாக போலீஸார் சிலரை நியமிக்க ஆலோசனை நடப்பதாக சொல்லப்படுகிறது.

கலை வேலைப்பாடுடன் கூடிய தங்க குருவாயூரப்பன் சிலை ஒன்றை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்து ஸ்பெஷல் பூஜை செய்துவந்தாராம். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சிலை கொலை சம்பவத்துக்கு பிறகு, காணவில்லை. அந்த தங்க குருவாயூரப்பன் சிலை தற்போது யாரிடம் இருக்கிறது என்பதைக் கண்டறியாமல் விடமாட்டோம் என களமிறங்கியுள்ளனர் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள்.

கொடநாடு பங்களா
கொடநாடு பங்களா

யாரிடம் இருக்கிறது? 

“ஜெயலலிதா அறையிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற விலையுயர்ந்த அலங்காரப் பொருள்கள் அடங்கிய மூட்டைகளில் ஒன்றை சஜ்ஜீவன் சகோதரர் சுனில் எடுத்துச் சென்றதாகவும், அதில் சிலை இருந்ததாகவும், அது அ.தி.மு.க நிர்வாகி ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது. ஆனால், அந்தச் சிலை தற்போது யாரிடம் இருக்கிறது என்பதை அறிய கோர்ட்டில் நீதிபதி முன்னால் கேள்வி எழுப்பினோம். ஆனால், ரெக்கார்டாக விடாமல் கூச்சலிட்ட அப்போதைய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சிலை பற்றிய எங்கள் கேள்வியை திசைதிருப்பிவிட்டனர். அடுத்தக்கட்ட குறுக்கு விசாரணையில் இந்த சிலை மாயம் தொடர்பாக கேள்வியெழுப்பாமல் விடமாட்டோம்" என தீர்மானமாக சொல்கிறார்கள் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள்.

கொலை நடந்ததும் ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட அளவிலான இரண்டு முக்கிய அதிகாரிகளுக்குதான் அந்த சிலை ரகசியம் தெரியும் என்றும் பேசப்படுகிறது. அவர்களையும் கூடுதல் விசாரணை என்கிற பேரில் கொண்டுவரப்போகிறது காவல்துறை. சம்பவம் நடந்த இடத்துக்கு முதலில் விசிட் செய்ததாக போலீஸார் ஒரு நேரத்தையும், தடய அறிவியல் துறையினர் வேறு ஒரு நேரத்தையும் சொல்கிறார்களாம். இதனால், குழப்பம் நீடிக்கிறது. இதுகுறித்தும் திடுக்கிடும் சில தகவல்கள் அடுத்த சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

கொடநாடு வழக்கு: `முன்னாள் முதல்வர் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டியதுதானே?!’ - கார்த்தி சிதம்பரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு