Published:Updated:

``பாஜக, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது!" - சொந்தக் கட்சிமீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

நாராயண திரிபாதி ( ட்விட்டர் )

`பா.ஜ.க-வுக்கு ஓட்டு சேகரிப்பதற்காகவே அதிகாரிகள் பணியாற்றிவருகின்றனர். நான் ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ. ஆனால் இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது நான் வேதனையும் கலக்கமும் அடைகிறேன்.' - நாராயண திரிபாதி

``பாஜக, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது!" - சொந்தக் கட்சிமீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

`பா.ஜ.க-வுக்கு ஓட்டு சேகரிப்பதற்காகவே அதிகாரிகள் பணியாற்றிவருகின்றனர். நான் ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ. ஆனால் இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது நான் வேதனையும் கலக்கமும் அடைகிறேன்.' - நாராயண திரிபாதி

Published:Updated:
நாராயண திரிபாதி ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் அரசு இயந்திரங்கள் முழுவதையும் தன் சொந்தக் கட்சியின் பிரசாரத்துக்காக பா.ஜ.க பயன்படுத்தியிருப்பதாக மைஹார் சத்னா தொகுதியில் நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பா.ஜ.க தலைவர் நாராயண திரிபாதி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அவர், ``நான் பா.ஜ.க-வுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் இங்கு நடப்பது உண்மையில் எனக்கு வேதனையளிக்கிறது. நான் மைஹார் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறேன். இங்கு கிராம அதிகாரியான பட்வாரி முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைத்து அதிகாரிகளும் பா.ஜ.க-வுக்காக உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் செய்திருக்கிறார்கள்.

பாஜக
பாஜக

பா.ஜ.க-வுக்கு ஓட்டு சேகரிப்பதற்காகவே அதிகாரிகள் பணியாற்றிவருகின்றனர். நான் ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ. ஆனால் இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது நான் வேதனையும் கலக்கமும் அடைகிறேன். இந்த நாட்டில் இன்று இரண்டு நிமிடங்களில் ஓர் அரசையே வீழ்த்திவிடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அது இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாராயண திரிபாதி
நாராயண திரிபாதி
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ நாராயண் திரிபாதி தன் சொந்தக் கட்சியின் மீதே வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ``பா.ஜ.க-வில் உண்மையைப் பேசத் துணிந்த ஒருவர் இருக்கிறார். நாராயணன் திரிபாதிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். தலைமை அதிகாரிகளால் ஜனநாயகம் வெளிப்படையாகத் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான போட்டியாளர்களின் வலியை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாராயண் திரிபாதி 2003 -ல் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராகவும், 2013 -ல் காங்கிரஸ் வேட்பாளராகவும், 2016 இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகவும், 2018-ல் பாஜக வேட்பாளராகவும் மைஹார் தொகுதியில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.