Published:Updated:

``எங்கள் துறையில் திருட்டு நடக்காத ஒரு பிரிவுகூட இல்லை!" - பீகார் அமைச்சர் ஓப்பன் ஸ்டேட்மென்ட்

பீகார் வேளாண்துறை அமைச்சர் சுதாகர் சிங்

``விவசாயிகளாகிய நீங்கள் என் உருவ பொம்மைகளை எரியுங்கள், அப்போது தான் நீங்கள் என் மீது கோபமாக இருப்பதை நான் அறிவேன்." - பீகார் வேளாண்துறை அமைச்சர் சுதாகர் சிங்

``எங்கள் துறையில் திருட்டு நடக்காத ஒரு பிரிவுகூட இல்லை!" - பீகார் அமைச்சர் ஓப்பன் ஸ்டேட்மென்ட்

``விவசாயிகளாகிய நீங்கள் என் உருவ பொம்மைகளை எரியுங்கள், அப்போது தான் நீங்கள் என் மீது கோபமாக இருப்பதை நான் அறிவேன்." - பீகார் வேளாண்துறை அமைச்சர் சுதாகர் சிங்

Published:Updated:
பீகார் வேளாண்துறை அமைச்சர் சுதாகர் சிங்

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, மகாபந்தன் கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைத்த நாள்முதலே, எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைத் தவிர்த்து சொந்தக் கூட்டணிக்குள்ளேயே அதிருப்தி நிலவுவதாகப் பேச்சுக்கள் வந்தன.

இந்த நிலையில், அந்தக் கூட்டணியின் ராஷ்ட்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் சுதாகர் சிங், தன் துறையைப் பற்றியே சர்ச்சையாகப் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்

பீகார் மாநிலம், கைமூரில் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுதாகர் சிங், ``எங்கள் துறையில்(வேளாண் துறை) திருட்டுச் செயல்களைச் செய்யாத ஒரு பிரிவுகூட இல்லை. மேலும், இந்தத் துறையின் பொறுப்பாளராக நானே இருப்பதால், அத்தகையவர்களுக்கு நானே தலைவராகவும் ஆகிவிட்டேன். அது மட்டுமல்லாமல், எனக்கு மேலேயும் இன்னும் பலர் இருக்கின்றனர். அதோடு, விதைக் கழகம் வழங்கும் விதைகளை எந்த விவசாயியும் தன்னுடைய வயல்களில் பயன்படுத்துவதில்லை. இதனால் விதைக் கழகம் 150-லிருந்து 200 கோடி ரூபாயை எடுத்துச் செல்கிறது.

பீகார் வேளாண்துறை அமைச்சர் சுதாகர் சிங்
பீகார் வேளாண்துறை அமைச்சர் சுதாகர் சிங்

விவசாயிகளாகிய நீங்கள் என் உருவ பொம்மைகளை எரியுங்கள், அப்போதுதான் நீங்கள் என்மீது கோபமாக இருப்பதை நான் அறிவேன். இல்லையெனில், எல்லாம் நன்றாக இருப்பதாக நானும் உணருவேன். நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய அறிக்கையை நான் திருத்தவில்லை. இதற்கு மேல் நான் சொல்வதற்கும் ஒன்றுமில்லை. மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்காகத் தொடர்ந்து நான் போராடுவேன்" என்று கூறினார்

மேலும் மகாபந்தன் கூட்டணி அரசு பற்றிப் பேசியபோது, `அரசாங்கம் புதியதாக இருந்தாலும், அவர்களின் வேலை முறையானது பழையதுதான்' என்று சுதாகர் சிங் தெரிவித்தார்.