Published:Updated:

``வெங்கைய நாயுடு அழைப்பை திமுக கைவிட வேண்டும்!" - புதுச்சேரி அதிமுக சொல்வதென்ன?

புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்

``பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அதேசமயம் காங்கிரஸார் அதை கறுப்புதினமாக அனுசரித்தனர்.” – புதுச்சேரி அதிமுக

``வெங்கைய நாயுடு அழைப்பை திமுக கைவிட வேண்டும்!" - புதுச்சேரி அதிமுக சொல்வதென்ன?

``பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அதேசமயம் காங்கிரஸார் அதை கறுப்புதினமாக அனுசரித்தனர்.” – புதுச்சேரி அதிமுக

Published:Updated:
புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்

புதுச்சேரியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன், ``காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் நடத்திவருகின்றனர். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறக்க பாஜக-வைச் சேர்ந்த வெங்கைய நாயுடுவை அழைத்துள்ளனர். அதேநேரத்தில் திமுக எம்.பி திருச்சி சிவா, `பாஜக-வை ஓட ஓட விரட்டுவோம்’ எனப் பேசியுள்ளார்.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

கருணாநிதி சிலையைத் திறக்க வெங்கைய நாயுடுவை அழைத்ததைக் கைவிட வேண்டும் அல்லது பாஜக-வைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய திருச்சி சிவா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மாதம் டெல்லியில் திமுக அலுவலகத் திறப்புவிழா நடந்தது. இதில் பாஜக தலைவர்களை அழைத்திருந்தனர். ஆனால் எந்த பாஜக தலைவரும் அந்தத் திறப்புவிழாவில் பங்கேற்கவில்லை. மத்திய அரசை எதிர்ப்பது, அதன் திட்டங்களை விமர்சிப்பது என ஒருபுறமும், அவர்களையே சிலை திறக்க அழைப்பது என மறுபுறமும் திமுக நாடகமாடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அதேசமயம் அது தங்களை வேதனைப்படுத்துவதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம், ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் கூறினர். அத்துடன் பேரறிவாளன் விடுதலை நாளை கறுப்புதினமாக அனுசரித்தனர்.

தற்போது மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து போராடப்போவதாகச் சொல்கின்றனர். இந்தப் போராட்டத்தில் எப்படி மற்ற கட்சியினரோடு காங்கிரஸார் ஒன்றாகப் பங்கேற்பார்கள்?’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism