Published:Updated:

புதுச்சேரி: ``மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் முறைகேடு” - சிபிஐ விசாரணை கேட்கும் காங்கிரஸ்

முதல்வர் ரங்கசாமி

``டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், அதே குற்றத்தை புதுச்சேரியில் பாஜக-வே சுமத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” - காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

புதுச்சேரி: ``மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் முறைகேடு” - சிபிஐ விசாரணை கேட்கும் காங்கிரஸ்

``டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், அதே குற்றத்தை புதுச்சேரியில் பாஜக-வே சுமத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” - காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

Published:Updated:
முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி மாநிலத்தில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு பூர்வாங்க அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. பெரிய மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவருவதற்கு முகாந்திரம் இல்லை. அதனால் புதுச்சேரி இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என தெரியவில்லை. சட்டசபையில் அதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் போதிய அளவு மதுபான ஆலைகள் இயங்கிவருகின்றன. இவற்றில் உற்பத்தியாகும் மதுவைக் குடித்து ஏற்கெனவே மக்கள் மயக்கநிலையில்தான் வாழ்கின்றனர். நாட்டிலேயே அதிக விதவைகள் உள்ள மாநிலமாக புதுச்சேரி காட்டப்படுகிறது. அப்படியிருக்க, புதிய மதுபான தொழிற்சாலைகள் அமைக்கவேண்டிய அவசியம் என்ன... அதிக குடிநீரை எடுத்து பயன்படுத்தக்கூடிய ஆலைக்கு எப்படி அனுமதி தருகின்றனர்?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10,000 லிட்டர் நிலத்தடி நீரைத்தான் எடுக்க வேண்டும் என்ற மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவையும் முடக்கம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது. புதுச்சேரியில் ஏற்கெனவே குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இது போன்ற நிலையில் அதிக நிலத்தடி நீரை எடுக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி தருவது மக்களை வஞ்சிக்கும் செயல். அதோடு மட்டுமின்றி மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி தருவதில் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளன. மதுபான ஆலை அனுமதியில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க எம்எல்ஏ-க்களே புகார் கூறியுள்ளனர். அதற்கும் இந்த அரசு பதிலளிக்கவில்லை.

டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் பா.ஜ.க குற்றம் சுமத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாட்டைக் காண்பிக்கிறது. டெல்லிக்கு ஒரு நீதி, புதுவைக்கு ஒரு நீதியா... இதில் கவர்னரின் நடவடிக்கை என்ன... புதுச்சேரியில் இயங்கிவந்த ஒரு மதுபான தொழிற்சாலையில் முறைகேடு நடைப்பெற்றதாக முந்தைய ஆட்சியில் ஆளுநர் நடவடிக்கை எடுத்து மூடினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு குற்றங்கள் நடைபெற்றாதாக நீதிமன்றமோ, அரசோ உறுதிப்படுத்தவில்லை. தற்போது அந்தத் தொழிற்சாலைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எந்தவித விசாரணையும் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டது எப்படி... ஏற்கெனவே கூறிய முறைகேடுகள் சரிசெய்யப்பட்டுவிட்டதானவா... 100 வயதைக் கடந்தவர்களுக்கு ரூ.7,000/- உதவித்தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மதுவை அதிகப்படியாக உற்பத்தியும், விற்பனையும் செய்ய அனுமதித்துவிட்டு, 100 வயதைத் தாண்டியவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது எப்படிச் சரியாக இருக்கும்... மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புதுச்சேரியில் பெண்களே அதிகம் உள்ளனர். ஆண்களில் பலர் குறைந்த வயதில் உயிரை விடுவதற்கு மதுப்பழக்கமே காரணமாக உள்ளது. புதுச்சேரியில் போதை தடுப்பு மையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன... ஒரு பக்கம் மது உற்பத்தி, விற்பனை. மறுபக்கம் போதை தடுப்பு அமைப்பா... கடந்த 2001-ம் ஆண்டு ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றபோது புதுச்சேரியில் இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 140 தான். ஆனால் தற்போது 500-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன.

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்
காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

இடைப்பட்ட காலங்களில் மற்றவர்கள் முதல்வர்களாக இருந்தபோது எந்த மதுபானக்கடைக்கும் அனுமதி தரவில்லை. உயர்த்தப்பட்ட அனைத்து மதுபானக் கடைகளும் முதல்வர் ரங்கசாமியால் அனுமதி அளிக்கப்பட்டவைதான். அதிக மதுபானக் கடைகளைத் திறப்பதும், மக்களை குடி மயக்கத்துக்கு தள்ளுவதுமே இந்த ஆட்சியின் நோக்கம். புதிய மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காங்கிரஸ் சார்பில் சி.பி.ஐ-க்கு நேரடியாக மனு அளிப்போம். பதவியைத் தேடி காங்கிரஸைவிட்டு அகில இந்திய அளவில் வெளியேறுகின்றனர். அதேபோல குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் வெளியேறியுள்ளனர். நாடு முழுவதும் பிரதமர் மோடியையும், பா.ஜ.க-வை எதிர்க்கும் சக்தியாக காங்கிரஸும், ராகுல் காந்தியும் திகழ்கின்றனர். தேர்தலோ, போட்டியோ இன்றி ராகுல் காந்தியைத் தலைவராகத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதுதான் காங்கிஸாரின் விருப்பம்” என்றார்.