Published:Updated:

``உலகுக்கே நாம் குருவாக இருக்க வேண்டும்!” - துணைநிலை ஆளுநர் தமிழிசை

தமிழிசை சௌந்தரராஜன்

``உலகம் எந்த ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் இந்தியாவின் முடிவு இல்லாமல் முடிவு எடுக்க முடியாது” – துணைநிலை ஆளுநர் தமிழிசை

``உலகுக்கே நாம் குருவாக இருக்க வேண்டும்!” - துணைநிலை ஆளுநர் தமிழிசை

``உலகம் எந்த ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் இந்தியாவின் முடிவு இல்லாமல் முடிவு எடுக்க முடியாது” – துணைநிலை ஆளுநர் தமிழிசை

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற 'G20 சின்னம் காட்சிப்படுத்துதல்' நிகழ்ச்சியை நேற்று மாலை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது, “ஜி-20 மாநாடு பாரதப் பிரதமரின் கனவுத் திட்டம். ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அது டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அத்தனை மாநிலங்களுக்கும் அதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மற்ற நாடுகளில் மாநாடு நடைபெறும்போது அந்தந்த தலைநகரங்களில்தான் நடைபெற்றது. ஆனால், நம் நாட்டில் தொடக்க நிலையின் முதல் மாநாடு புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது என்பது சிறப்பு.

உலக பொருளாதார சக்தியாக இந்தியா மீண்டும் எழுச்சி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
உலக பொருளாதார சக்தியாக இந்தியா மீண்டும் எழுச்சி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

ஜனவரி 31-ம் தேதி மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தோடு இணைந்து வருவது நமக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. பாரதப் பிரதமர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போகும்போது அதுபற்றி விமர்சனம் வந்தது. ஆனால், ஜி-20 மாநாட்டின் தலைமை நிலை நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. பாரதியார் “உலகுக்கு அமரத்துவம் அளிக்கும் நிலையை இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆமாம் இந்தியா உலகுக்கு அளிக்கும்..” என்று பாடினார். அதன்படி இன்று இந்தியா  உலகத்துக்கு அளித்துக்கொண்டிருக்கிறது. உலகம் எந்த ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் இந்தியாவின் முடிவு இல்லாமல் முடிவு எடுக்க முடியாது என்ற பிரமாண்டமான நிலையை மத்திய ஆட்சி இந்தியாவுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பது நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று.

புதுச்சேரி விழாக்கோலமாக இருக்கிறது. உலகுக்கு நாம் குருவாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் நாட்டுக்கு உழைத்த அத்தனை தலைவர்களின் ஆசை. இதை எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். இப்போது வளர்ந்துவரும் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றிருக்கிறது. ’இந்தியா 2030-க்குள் ஐந்து டிரில்லியன் நாடாக பொருளாதார நிலையை அடைய வேண்டும். கடுமையான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அந்தப் பயணம் நிச்சயமாக வெற்றியைத் தரும்’ என்று சொன்னார் நம் பிரதமர். அதேபோல புதுச்சேரியும் நிச்சயமாக பல வளர்ச்சிகளைப் பெறும்.

குறிப்பாக புதுச்சேரிக்கு வருகின்ற வெளி மாநிலத் தலைவர்கள் மறுபடியும் புதுச்சேரிக்கு வர வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மாநாடு நடத்தப்படும். அதற்கான முயற்சி எடுக்கப்படும். அதற்குத் தலைவர்கள், அதிகாரிகள், மாணவர்களின் துணையோடு இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது. ஓர் உலகம். ஒரு குடும்பம். ஓர் எதிர்காலம். இதனால்தான் 85 கோடி மக்களுக்கு கொரோனா காலத்துக்குப் பிறகு இலவசமாக அரிசி கொடுக்கக்கூடிய நிலையை, பசி இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக முயற்சி எடுத்து இருக்கிறார்கள். இனிவரும் காலத்தில் ஒரு நாட்டைச் சென்று பார்க்க வேண்டும் என்றால் அது இந்தியாவாகவும் மாநிலத்தில் அது புதுச்சேரியாகவும் இருக்க வேண்டும்” என்றார்.