Published:Updated:

புதுச்சேரி: ஒரே திட்டம், இரண்டு தொடக்க விழாக்கள்! - அப்போது நாராயணசாமி... இப்போது தமிழிசை

சத்து மாவு பால் தொடக்க விழாவில் தமிழிசை சௌந்தரராஜன்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்த சத்து மாவு பால் திட்டத்தை, தற்போது மீண்டும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

புதுச்சேரி: ஒரே திட்டம், இரண்டு தொடக்க விழாக்கள்! - அப்போது நாராயணசாமி... இப்போது தமிழிசை

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்த சத்து மாவு பால் திட்டத்தை, தற்போது மீண்டும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

Published:Updated:
சத்து மாவு பால் தொடக்க விழாவில் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று மாலை செய்தியாளர்களுக்கு ஒரு செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டது. அதில், ``ஸ்ரீ சத்ய சாய் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சத்து பானம் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (நேற்று) தொடங்கி வைத்தார். துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்விச் செயலர் ஜவஹர், ஸ்ரீ சத்ய சாய் அன்னபூர்ணா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியிலிருக்கும் சுமார் 20,000 பள்ளிக் குழந்தைகள் பயனடைவார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அந்த நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ரங்கசாமி மற்றும் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை, ``சத்ய சாய் அறக்கட்டளை நீண்டகாலமாக சமூக சேவைகள் ஆற்றி வருவதை நான் அறிவேன்.

2019-ல் நாராயணசாமி துவக்கை வித்த சத்துமாவு பால் திட்டம்
2019-ல் நாராயணசாமி துவக்கை வித்த சத்துமாவு பால் திட்டம்

புதுச்சேரியில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு சத்து பானம் வழங்கும் திட்டத்தை தொடங்கியிருப்பதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்தியாவில் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதனால்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் எப்போதும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு கல்வியோடு ஊட்டச்சத்தையும் வழங்குவதை வலியுறுத்துகிறது. இதுவே பாரதப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து என்பது அவர்களின் உடலை பாதுகாக்க மட்டுமல்ல படிப்பில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. குழந்தைகளை மகிழ்ச்சியாக வைக்கிறது. புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்” என்று தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது ஒருபுறமிருக்க கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இதே ஸ்ரீ சத்ய சாய் அண்ணப்பூர்னா அறக்கட்டளை மூலம் சத்துப்பால் வழங்கும் திட்டத்தை, சட்டப்பேரவையில் தொடங்கி வைத்தார் அப்போதைய முதல்வர் நாராயணசாமி. அந்த நிகழ்ச்சியில் அப்போதைய கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் சத்யசாய் அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இது குறித்து அப்போது நாராயணசாமியின் ட்விட்டர் பக்கத்தில், ``இன்று 14.11.2019 மாலை சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் நாராயணசாமி அவர்களால் ஸ்ரீ சத்ய சாய் அன்னபூர்ணா அறக்கட்டளையும், புதுச்சேரி கல்வி துறையும் இணைந்து காலை சிற்றுண்டியில் ஊட்டச்சத்துணவு வழங்கும் திட்டத்தினை அரசு பள்ளி மாணவர்களுக்காக அமுல்படுத்தியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு இந்த சேவையினை புதுச்சேரியில் ஸ்ரீ சத்யசாயி அன்னபூர்ணா அறக்கட்டளை சத்து நிறைந்த `குக்கீ' பிஸ்கட்டுகள் விநியோகத்தின் மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அரசின் சார்பில் பால் வழங்கப்படும்போது, அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் நுண்ணுட்ட சத்துக்கள் (Micro Nutrients) அடங்கியுள்ள `Sai Sure' என்னும் உயர் சத்துணவு மாவு வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் முதற்கட்டமாக 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மாநில முழுவதும் செயல்படுத்தப்பட்டு காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. அந்த திட்டம்தான் தற்போது மீண்டும் ஆளுநர் தமிழிசையால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டுதொடக்க விழாக்களின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் நெட்டிசன்கள், ``ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம், கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் நிறுத்தப்பட்டது. அதற்கு இன்னொரு தொடக்க விழாவா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism