Published:Updated:

புதுச்சேரி: தேர்வை நிறுத்தச் சொன்ன பாஜக-வினர்... `வெளியே போ' என எதிர்த்த பெற்றோர்கள்

பா.ஜ.க-வினரை வெளியேற்றிய பெற்றோர்

இந்து முன்னணி அறிவித்த பந்த் போராட்டத்தில், தேர்வை நிறுத்த பள்ளிக்குள் நுழைந்த பா.ஜ.க-வினரை, பெற்றோர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி: தேர்வை நிறுத்தச் சொன்ன பாஜக-வினர்... `வெளியே போ' என எதிர்த்த பெற்றோர்கள்

இந்து முன்னணி அறிவித்த பந்த் போராட்டத்தில், தேர்வை நிறுத்த பள்ளிக்குள் நுழைந்த பா.ஜ.க-வினரை, பெற்றோர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பா.ஜ.க-வினரை வெளியேற்றிய பெற்றோர்

தமிழக எம்.பி ஆ.ராசாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக, இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் எதிரொலியாக இதுவரை ஐந்து தமிழக அரசுப் பேருந்துகள், இரண்டு தனியார் கல்லூரிகளின் மாணவர் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பயணியர் பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து புதுச்சேரி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த பந்த் அறிவிப்பின் தொடர்ச்சியாக இன்று ஒருசில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. அதில் உப்பளம் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் பெண்கள் பள்ளி, 1 முதல் 10-ம் வகுப்பு வரை விடுமுறை அளித்துவிட்டு +1 மற்றும் +2 மாணவிகளுக்கு மட்டும் இன்று காலாண்டு தேர்வு நடத்தியது.

பா.ஜ.க-வினரை வெளியேற்றும் மாணவிகளின் பெற்றோர்கள்
பா.ஜ.க-வினரை வெளியேற்றும் மாணவிகளின் பெற்றோர்கள்

அதைக் கேள்விப்பட்டு தன்னுடைய ஆதரவாளர்களுடன் அந்தப் பள்ளிக்குள் நுழைந்த முதலியார்பேட்டை பா.ஜ.க பிரமுகர் வெற்றிச்செல்வன் என்பவர், தேர்வை நிறுத்தும்படி கூறினார். அப்போது அவர்களைச் சூழ்ந்துகொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள், ”எங்கள் பிள்ளைகளின் தேர்வை நிறுத்தச் சொல்ல நீங்கள் யார்... உங்கள் அரசியலை வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள். பள்ளிக்குள் வராதீர்கள். மாணவர்களிடம்தான் உங்கள் அரசியலைக் காட்டுவீர்களா?” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து ”வெளியே போ... வெளியே போ...” என்று கோஷம் எழுப்பி அவர்களை வெளியேற்றினார்கள். அதனால் வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர். இதனால் அந்தப் பகுதியே பதற்றமாகக் காணப்படுகிறது.