Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: பணப்பட்டுவாடா புகார்... அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் அதிரடி சோதனை!

ரெய்டு
ரெய்டு

சோத்துப்பாளை முருகேசனின் வீட்டின் ஒவ்வோர் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது காரிலும் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத ரூ. 2.53 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. இந்தநிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகிப்பதைத் தடுத்து அவற்றைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு முதல்நிலை ஒப்பந்ததாரருமான சோத்துப்பாளை முருகேசனின் எழில்நகர் வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் சென்றது. இதைத் தொடர்ந்து தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மீனாள் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினரும், டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையிலான போலீஸாரும் அதிரடி சோதனை நடத்தினர்.

ரெய்டு
ரெய்டு

சோத்துப்பாளை முருகேசனின் வீட்டின் ஒவ்வோர் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது காரிலும் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத ரூ. 2.53 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். இதேபோல், அன்னவாசல் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சாம்பசிவத்தின் அன்னவாசல் வீட்டில் சோதனை மேற்கொண்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் கணக்கில் வராத ரூ.1.51 லட்சம் பணத்தையும், கட்சிக் கரைவேட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

கொடும்பாளூரில் பறக்கும்படை மேற்கொண்ட சோதனையில் அ.தி.மு.க நிர்வாகி சிவசாமி என்பவரது வீட்டில் ரூ.1.44 லட்சம் கைப்பற்றப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணனின் உதவியாளர் வீரபாண்டி வீட்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.49 லட்சம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு