Published:Updated:

பத்திரப்பதிவுத்துறையில் முறைகேடுகள் குறித்து விசாரணை... சிறப்பு புலனாய்வுக்குழு நியமன பின்னணி?!

பத்திரப்பதிவுத்துறை
News
பத்திரப்பதிவுத்துறை

பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தல் தொடர்பாக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசு ஆணையின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்!

சட்டப் பேரவையில் கடந்த 06.09.21 அன்று 2021-22-ம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு விவாதத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, பத்திரப்பதிவுத்துறை தலைவர் இது தொடர்பாக தனது சிபாரிசை அரசுக்கு அனுப்பினார். அதை அடிப்படையாகவைத்து தற்போது அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதைப்போல், போலி பத்திரப்பதிவு என்றால், அதிகாரிகள் லெவலில் பத்திரப்பதிவை கேன்சல் செய்யவும், அந்த மாதிரியான பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யும்வகையில் தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டு, அது இந்திய ஜனாதிபதியின் கையெழுத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது. சட்ட சம்பிரதாயம் முடித்து, அது வந்தவுடன் உடனே செயல் வடிவம் பெறும்.

பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு

இது பற்றி பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி ஒருவருடன் பேசியபோது, ``சிறப்பு புலனாய்வுக்குழு தனது விசாரணை காலகட்டமாக மூன்று வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தனி கட்டடத்தில் விசாரணை அலுவலகம் செயல்படும். கடந்த காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மட்டுமில்லாமல் எந்தக் காலகட்டத்தில் தவறுகள் நடந்திருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு புலனாய்வுக்குழுவினரிடம் புகார் தரலாம். ஆள் மாறாட்டம், நில மோசடி மூலம் போலி ஆவணப் பதிவுகள் குறித்து விசாரிக்கப்படும். அயல்நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் அசையா சொத்தின் உரிமையாளர்களை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணப் பதிவுகள் நடந்ததா என்பது பற்றியும், இறந்தவர்கள் பெயரிலுள்ள சொத்துகளை ஆள் மாறாட்டம் செய்து பதிவுசெய்தார்களா என்பது பற்றியும் விரிவாக விசாரிக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அசல் ஆவணங்கள் தொலைந்துபோனதாக போலியாக காவல்துறையிடமிருந்து சான்றிதழ் பெற்று பிறரின் சொத்தை அபகரிப்பது, போலியான, காலாவதியான, ரத்துசெய்யப்பட்ட பொது அதிகார ஆவணங்கள் மூலம் தவறான வகையில் உரிமை மாற்றம் மூலம் நில அபகரிப்பு செய்வது, போலி பட்டா தயாரித்து அதன் அடிப்படையில் பிறரின் சொத்துகளை அபகரிப்பது, முன் ஆவணத்தைப்போல மற்றோர் ஆவணத்தைத் தயார்செய்து சொத்தை உண்மையான உரிமையாளர்களிடமிருந்து அபகரிப்பதோடு நிலம் வாங்குபவர்களிடமிருந்து கிரயத்தொகை பெற்று ஏமாற்றுவது, ஒரே சொத்தை ஒன்றுக்கு மேற்பட்டோரிடம் விற்று ஏமாற்றுவது, சொத்தின் வாரிசுதாரர் அனைவரையும் குறிப்பிடாமல் சில வாரிசுதாரர்கள் மட்டுமே சொத்தை பங்கிட்டுக்கொண்டு பிற பங்காளர்களுக்குச் சொத்து கொடுக்காமல் ஏமாற்றுவது போன்ற அனைத்து வகை மோசடிகளையும் இந்தக் குழு விசாரிக்கும்.

பத்திரப்பதிவு அலுவலகம் (மாதிரி படம்)
பத்திரப்பதிவு அலுவலகம் (மாதிரி படம்)

அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட வருவாய் இழப்புகள் குறித்த விவரங்களையும், அந்த வருவாய் இழப்புகளை வசூலிக்கவேண்டிய வழிமுறைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகளையும் இந்தக் குழு சிபாரிசு செய்யும். தமிழகத்தில் கடந்தகாலங்களில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பதிவு செய்தது குறித்துத் தீர விசாரிக்கும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறைப்படுத்துதல் கட்டணம் மற்றும் மேம்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்ட விதத்தையும் இந்தக்குழு ஆய்வு செய்யும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் செயல்படுவார். இவர் யாரென்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அவருக்கு உதவியாக இரண்டு உறுப்பினர்கள். ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், இன்னொருவர், கூடுதல் பத்திரப்பதிவுத்துறை தலைவர் அந்தஸ்தில் இருப்பவர். இவர்தான் சிறப்பு புலனாய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார். நிர்வாக விவகாரங்களை கவனிக்க மாவட்டப் பதிவாளர் அந்தஸ்தில் ஓர் அதிகாரி, சார்பதிவாளர் அந்தஸ்தில் இரண்டு அதிகாரிகள், ஐந்து உதவியாளர்கள, மூன்று டைப்பிஸ்டுகள் மற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் என 12 அலுவலர்கள் புதியதாக நியமிக்கபடவிருக்கிறார்கள்.

தமிழக அரசு
தமிழக அரசு

இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பதிவுத்துறை தலைவர் மூலம் அரசுக்கு அறிக்கையை தாக்கல் செயயும். கடந்த காலத்தில் நடைபெற்ற மோசடிப் பதிவுகள் மற்றும் நிலஅபகரிப்பு புகார்கள் குறித்து விரிவாக விசாரித்து அறிக்கையை அரசுக்கு குழு அளிக்கும். வருங்காலங்களில் இந்தத் தவறுகள் முற்றிலும் நடைபெறாமல் தடுக்கத் தேவையான ஆலோசனைகளையும் தெரிவிக்கும். பதிவுத்துறையால் நிர்வகிக்கப்படும் பல்வேறு சட்டங்களிலுள்ள நடைமுறை சிக்கல்களையும், செயலாக்க இடர்ப்பாடுகளையும் இந்தக் குழு கண்டறிந்து அதைச் சரிசெய்வதற்கான சரியான நடைமுறைத் திட்டத்தையும் இந்தக் குழு வழங்கும்'' என்றார்.