Published:Updated:

`200 நாள்களில் 557 கொலைகள்..!’ - அதிமுக குற்றச்சாட்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கல்களும்!

2016-ல் தேசிய குற்ற ஆவண காப்பகம் தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி 2001 -2006 வரையில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. 2006 - 2011 வரையில் குற்றங்கள் அதிகமாகி உள்ளன. 2011 முதல் 2016 வரை குற்றங்கள் குறைந்துள்ளன.

`200 நாள்களில் 557 கொலைகள்..!’ - அதிமுக குற்றச்சாட்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கல்களும்!

2016-ல் தேசிய குற்ற ஆவண காப்பகம் தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி 2001 -2006 வரையில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. 2006 - 2011 வரையில் குற்றங்கள் அதிகமாகி உள்ளன. 2011 முதல் 2016 வரை குற்றங்கள் குறைந்துள்ளன.

Published:Updated:

நியூஸ் ஜெ சேனலில் `அராஜக பதிவேடு’ என்கிற தலைப்பில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் நடக்கும் ஆளுங்கட்சியின் அராஜகங்கள் என தொகுத்து வெளியிடுகிறார்கள். அந்த பதிவேடுகளில் அதிக இடம்பெறுவது போலீஸின் அத்துமீறல்கள்தான். அடுத்து இடம்பெறுவது, ஆளுங்கட்சியினர் நடத்தும் அட்ராசிட்டி சம்பவங்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று எதிர்க்கட்சி என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல சந்தர்பங்களில் கூறிவருகிறார். அவரே, ``விசாரணை என்கிற பெயரில் அ.தி.மு.க-வினரை அழைத்துச் சென்று பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கும் போக்கு நிலவுகிறது” என்கிறார். அவரை தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

``எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து வருவதையும், பட்டப் பகலில் கொலைகள், கொள்ளைகள் அன்றாடம் நடைபெற்று வருவதையும், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், இன்னும் சொல்லப்போனால் காவல் துறையினரும் தி.மு.க.வினரால் தினந்தோறும் மிரட்டப்படுவதையும், அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் தி.மு.க.வினரின் தலையீடு தலைவிரித்து ஆடுவது பற்றியும் நான் எனது அறிக்கைகள் வாயிலாக சுட்டிக்காட்டி, இவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அவர்களுக்கு பல வேண்டுகோளை விடுத்திருந்தேன்.

ஆனால் ஒருவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே வருகிறது. கடந்த எட்டு மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் ஓர் ஒலிநாடா செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், தான் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளளாக பணிபுரிவதாகவும், ஏலச் சீட்டு மோசடி சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யக்கூடாது என தி.மு.க. பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், வழக்கு் பதியாததற்கு உரிய காரணத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாகவும் மணல் கடத்தினால் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று சில தி.மு.க. பிரமுகர்கள் தொல்லைக் கொடுப்பதாகவும், இதன் காரணமாக உளைச்சல் அதிகமாகி உள்ளதாகவும், திமுகவினர் செய்யும் அராஜகங்களைப் பொறுத்துக் கொண்டு தன்னால் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், எனவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அந்த சார் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு காவல் சார் ஆய்வாளரே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்றால், மற்றவர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. சட்டம் - ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் துறையிலே இதுபோன்ற அராஜகம் என்றால் மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல இதுபோல் எத்தனை 'அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம், திமுகவில் இதுபோன்ற அராஜகச் செயலுக்கு, சட்ட விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆளுநரிம் மனு அளித்த அதிமுக சட்ட் ஆலோசனைக்குழு
ஆளுநரிம் மனு அளித்த அதிமுக சட்ட் ஆலோசனைக்குழு

கடந்த டிசம்பர் 27-ம் தேதியன்று அ.தி.மு.கழக சட்ட ஆலோசனை குழுவினர் சார்பில் தமிழக கவர்னர் ரவியை நேரில் சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக ஆதாரங்களுடன் புகார் மனு கொடுத்தனர். அந்த குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவரும் அ.தி.மு.கழக ஆட்சியின் போது சென்னை உயர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்தவருமான முன்னாள் எம்.எல்.ஏ. இன்பத்துரையிடம் பேசினோம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்கள் கட்சி சார்பில் கவர்னரிடம் கொடுத்த மனுவில் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறோம். உதாரணத்துக்கு, கடந்த 200 நாட்களில் 557 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன என்பதை நேரில் விரிவாக எடுத்துச் சொன்னோம். இருட்டினால், கொலை. விடிந்தால், பாலியல் வன்கொடுமை என்கிற ரீதியில் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. மோசடி வழக்கில் ஏ2 ராஜேந்திரபாலாஜி. ஏ1 ஆக இருப்பவர் வெளியில் சுதந்திரமாக நடமாடுகிறார். அவரை போலீஸ் பிடிக்கவில்லை. ஆனால், ஏ2 வாக இருக்கும ராஜேந்திரபாலாஜியை 8 தனிப்படை போட்டு தேடிப்பிடிக்கிறார்கள். இதிலிருந்ததே புரிந்துகொள்ளலாம்.. அரசியல் பழிவாங்கல்தான் இது என்பதை!

முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை
முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு நடத்துகிறது. சுதந்திரமாக செயல்படவேண்டிய துறை அது! அப்போதே, அந்தத்துறையின் இயக்குநர் கந்தசாமி போய் முதல்வரை பார்த்து பேசுகிறார். எதற்கு பார்க்கவேண்டும்? என்ன உத்தரவு கொடுத்தார் முதல்வர்? இதெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

ராதாபுரத்தில் அரசு இன்ஜினியர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். நிதிமுறைகேட்டில் சிக்கிய இன்னொரு அதிகாரி தி.மு.கழக வி.ஐ.பி-க்கு வேண்டப்பட்டவர். லஞ்ச ஒழிப்பத்துறையும் வந்துவிடுகிறது. அவர்களிடம அந்த இன்ஜினியர் நடந்த உண்மையை சொல்லிவிடுகிறார். அதற்கு பிறகு, குற்றவாளியை காப்பாற்ற போலி பில் ரெடி பண்ணித்தரும்படி இன்ஜினியரை மிரட்டியிருக்கிறார்கள். அதற்கு பயந்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.

முறைகேட்டில் சிக்கிய அதிகாரி, சஸ்பெண்டில் இருக்கிறார். அப்படியே, திருட்டு மணல் கடத்தலில் ஈடுபட்டு போலீஸுல் சிக்குகிறார். பொதுமக்களே பிடித்து போலீஸுல் விடுகிறார்கள். அங்கிருந்தபடியே அந்த நபர் தன்னை விடுவிக்க அரசு பஸ்ஸை மறித்து போராட்டம் நடத்தும்படி பலருக்கும் செய்தி அனுப்புகிறார்(பாருங்கள்..ஆதாரத்தை..என்று சொல்லி காட்டுகிறார்).

ஆன்லைன் லாட்டரியால் எத்தனை பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? இதை தடுக்க அ.தி.மு.க ஆட்சியில் தடை கொண்டுவரப்பட்டது. பிறகு அது நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஏன்?.. தமிழக அரசு புதிய சட்டத்தைப் போட்டு இந்நேரம் அந்த லாட்டரியை தடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அ.தி.மு.கவினர் பெரும்பான்மையான பதவிகளில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களை கலைக்க புதிய அவசர சட்டம் கொண்டுவர முடிந்த அரசால், சூதாட்டத்தை ஒழிக்க புதிய சடடத்தை ஏன் கொண்டுவரவில்லை?

வடமாநில கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தற்போது அதிகமாகி வருகிறது. வேலூர், திருப்பத்தூரில் நடந்த நகைக்கொள்ளை சம்பவங்களின் பின்னணியை பாருங்கள்! வடமாநில ஆட்கள் அவற்றில் இருக்கிறார்கள். இதைவிட கொடுமை, ஒன்றரை வயது குழந்தையின் உடல் எரிந்த நிலையில் கிடக்கிறது. அங்கே வந்த பெண் டி.ஐ.ஜி. ஒருவர், அந்தக்குழந்தை தற்கொலை செய்துகொண்டது என்று பொய்யை பேட்டியாக கொடுக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பள்ளி, கல்லூரி வளாகங்களில் விற்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று டி.ஜி.பி-யான சைலேந்திரபாபு சொல்கிறார். அப்படியென்றால்.. மற்ற இடங்களில் தாராளமாக விற்கலாம் என்று சொல்ல வருகிறாரா?

மாநில கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் இருப்பவர் தாமரைக்கண்ணன். அவர் நடுநிலையோடு பேசவேண்டும். ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர் மணிகண்டன் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மர்மமான முறையில் இறந்து போகிறார். அவர் இறந்துபோனதற்கு காரணம்..போலீஸ் என்கிறார்கள் குடும்பத்தினர். ஆனால், மாணவர் விஷம் குடித்து இறந்துவிட்டதாக பிளேட்டை திருப்பிப்போடுகிறார். இதை மாவட்ட லெவல் அதிகாரி சொல்லியிருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் டி.ஜி.பி-யிடம் முறையிடலாம். ஆனால், கூடுதல் டி.ஜி.பி-யே அப்படி பேட்டிக்கொடுக்கும்போது.. எங்கே போய் முறையிடுவது? '' என்கிறார்.

தமிழக காவல்துறையின் முன்னாள் உயர் அதிகாரியும், உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான வரதராஜ் பேசுகையில்..

''ஏன் தி.மு.கழக அரசு பின்தங்கிவிட்டது? என்பதை விளக்கவேண்டுமானால், தமிழக அரசியலில் கொஞ்சம் பின்நோக்கிப்போகவேண்டும். 2016-ல் என்.சி.ஆர்.பி.(NCRB- National Crime Records Bureau) என்று அழைக்கப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி 2001 முதல் 2006 வரை தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. 2006 முதல் 2011 வரை குற்றங்கள் அதிகமாகி உள்ளன. 2011 முதல் 2016 வரை குற்றங்கள் குறைந்துள்ளன என்று சொல்லியிருக்கிறார்கள்.

NCRB
NCRB

அதாவது, அ.தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது குற்றங்கள் குறைந்திருந்தன. தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது அதிகமாகியுள்ளதாக சொல்லிருக்கிறார்கள். இப்படித்தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது. காரணம், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கோடம்பாக்கத்தில் குழந்தைக்கனி என்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் ரௌடிகளுக்கு சிம்மசொப்பமனமாக இருந்தார். சட்டவிரோத செயல்களை நடக்காமல் செய்தார். அப்போதைய ஆளுங்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அந்த இன்ஸ்பெக்டரை மாற்றச் சொல்லி போராட்டம் நடத்தினர். இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், அவரது கட்சிக்காரர்களை கடுமையாக எச்சரித்தார்.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா

இதனால் ஆளும்கட்சியினரே அடங்கிப்போனார்கள். இந்த விஷயம் தமிழகம் முழுக்க பரவியதால், ஆளுங்கட்சியினர் காவல் நிலையங்கள் பக்கமே போகவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அப்படித்தான். போலீஸ் ஆட்சிதான் நடந்தது. கட்சிக்காரர்கள் காவல்நிலையத்துக்கு போகமாட்டார்கள். போனால், தகவல் முதல்வருக்கு போய்விடும். கட்சியை விட்டு தூக்கிவிடுவார் என்கிற பயம் நிலவியது.

ஆனால், இந்த தி.மு.க ஆட்சியில் அப்படியில்லை! ரௌடிகளை முன்னெச்சரிக்கையாக போலீஸார் பிடிக்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர் ஒருவர், எங்கள் கட்சிக்காரரை போலீஸ் பிடிக்கிறது என்று கூப்பாடு போடுகிறார். அப்படியென்றால், உங்கள் கட்சிக்காரர் ரௌடிதானே? அவர்களை போலீஸ் பிடித்தால் தவறா? கிரிமினல்கள், சமூக விரோதிகள் ஆங்காங்கே சின்ன லெவலில் அரசியல்கட்சிகளுக்குள் பின்வாசல் வழியாக வந்துவிடுகிறார்கள். கீழ்மட்ட கட்சிப்பிரமுகர்களுக்கு பணத்தை கொடுத்து உள்ளே வருகிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அந்த கட்சியின் கீழ்மட்ட பதவிகளை இந்தமாதிரி ஆட்கள் சிலர் பிடித்து வந்துவிட்டார்கள். தற்போது ஆளுங்கட்சி பேனர். போதாதா? தொடர்ந்து சட்டவிரோத காரியங்களை செய்துவிட்டு கொடிபிடித்து போலீஸுக்கு எதிராக குரல்கொடுக்கிறார்கள். முக்கிய வி.ஐ.பி-களை பிடித்து பிரஷர் கொடுக்கிறார்கள். இந்த மாதிரி சமூக விரோதிகள் அரசியலில் பெருகி வருவதால், போதிய ஆதாரங்கள் இருந்தும் அவர்களை போலீஸாரால் நெருங்க முடியவில்லை கையை பிசைந்து நிற்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருப்பதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று '' என்கிறார்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

இதைப்பற்றி தமிழக போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

``அரசியல் காரணங்களுக்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அ.தி.மு.கழக ஆட்சியில் கடந்த காலத்தில் நடந்த குற்றச்சம்பவங்களையும், அதன் பிறகு கடந்த எட்டு மாதங்களாக ஆட்சியில் உள்ள தி.மு.கழக ஆட்சியின் போது தமிழகத்தில் நடந்த குற்றச்சம்பவங்களையும் ஒப்பீட்டு பார்த்தால்...குறைவுதான். ரௌடிகளை என்கவுண்டர் செய்த சம்பவங்கள் நாலு நடந்துள்ளன. ஏராளமான ரௌடிகளை சிறைச்சாலையில் அடைத்திருக்கிறோம். குடும்ப வன்முறை, சிவில் பிரச்னை, திருமணம் தாண்டிய உறவு காரணமாக நடைபெற்ற க்ரைம் சம்பவங்கள், பழைய முன்விரோதம், மது குடிப்பதால் நடக்கும் கொலைகளை கழித்துவிட்டுப்பார்த்தால், கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இதையெல்லாம் நேரம் வரும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் சொல்லுவார் '' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism