Published:Updated:

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: புதுச்சேரிக்குப் பேருந்து; கடைகளுக்குக் கூடுதல் நேரம்!-முழு விவரம்

ஊரடங்கு
ஊரடங்கு

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு ஜூலை 19-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் திங்கட்கிழமை அதிகாலையுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு ஜூலை 19-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில்...

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவையைத் தொடங்க அனுமதி.

மாநிலங்களுக்கு இடையேயான தனியார் அரசுப் பேருந்து போக்குவரத்து தடை தொடரும்.

திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது.

மொத்த வியாபார கடைகள் - கோயம்பேடு
மொத்த வியாபார கடைகள் - கோயம்பேடு

உணவகம், தேநீர்க் கடைகள் இரவு 9 மணி வரை இயங்கலாம்.

அரசியல் கூட்டங்கள், பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளுக்கான தடை தொடர்கிறது.

உணவகம், பேக்கரி, தேநீர்க் கடைகள் இரவு 9 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல்குளங்கள் திறப்பதற்கான தடை தொடர்கிறது.

மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகளை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண அலங்காரம்
திருமண அலங்காரம்

மதுக்கூடங்கள், நீச்சல்குளங்கள், சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை தொடர்கிறது.

திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இந்த வாரமும் தொடரும்.

இறுதிச்சடங்கில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

நோய் அறிகுறி தென்பட்டவுடன் அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு