Published:Updated:

வேலூர்: 6 வயது மகளிடம் அத்துமீறல்! - கொடூரத் தந்தை சிறையிலடைப்பு

வேலூர்

வேலூரில், 6 வயது மகளிடம் அத்துமீறிய கொடூரனைப் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர்: 6 வயது மகளிடம் அத்துமீறல்! - கொடூரத் தந்தை சிறையிலடைப்பு

வேலூரில், 6 வயது மகளிடம் அத்துமீறிய கொடூரனைப் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Published:Updated:
வேலூர்

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 34 வயது நபர்மீது திருட்டு, கஞ்சா உட்பட சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நபரின் மனைவி மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, தனது 6 வயது மகளுடன் அந்த நபர் வசித்துவந்தார். அந்த நபரின் தவறான நடவடிக்கையின் காரணமாக, அவருடைய் மகளை, வாலாஜாபேட்டையில் வசிக்கும் தாய்வழித் தாத்தா அழைத்துச் சென்று பாதுகாத்துவந்தார்.

குற்றப் பின்னணியுடைய அந்த நபரும் சாப்பாட்டுக்கே வழியில்லாத காரணத்தால், மகளுடன் மாமனார் வீட்டுக்கே சென்று தங்கி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு ஊரைச் சுற்றியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல... மாமனார் கோபமடைந்து, `வேலை வெட்டிக்குப் போக மாட்டீயா?’ என்று கேட்க... வறட்டு கௌரவத்துடன் மகளை அழைத்துக்கொண்டு காட்பாடி அருகேயுள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டார் அந்த நபர்.

சிறார் வதை
சிறார் வதை

மீண்டும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கிய அந்த நபர், பாலியல் தொழில் செய்யும் பெண்களை வீட்டுக்கு அழைத்துவந்து, தனது 6 வயது மகளின் கண் முன்னாலேயே அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, பெற்ற மகள் என்றும் பாராமல், சிறுமியிடமும் அத்துமீறியிருக்கிறார். கத்திக் கூச்சலிடும் மகளை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். இதனால், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் சொல்கிறது காவல்துறை.

இது குறித்து, பக்கத்து வீட்டுப் பெண், காட்பாடி அனைத்து மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீஸார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்திய பின்பு தந்தையை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து, சிறையிலடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் விருப்பத்தின்பேரில் தாய்வழித் தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism