Published:Updated:

ராகுல் யாத்திரை: 80 அடி நீள ஃபிளெக்ஸில் சாவர்க்கர் படம் - காந்தி படத்தைக்கொண்டு மறைத்த காங்கிரஸார்

ராகுல் யாத்திரையை வரவேற்று வைக்கப்பட்ட சாவர்க்கர் போட்டோ

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அமைப்பினர் மட்டுமே சாவர்க்கரைப் புகழ்ந்து கொண்டாடிவருகின்றனர். அதேசமயம் காங்கிரஸ் கட்சியினரும் சாவர்க்கரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பதாக விவாதம் எழுந்தது.

ராகுல் யாத்திரை: 80 அடி நீள ஃபிளெக்ஸில் சாவர்க்கர் படம் - காந்தி படத்தைக்கொண்டு மறைத்த காங்கிரஸார்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அமைப்பினர் மட்டுமே சாவர்க்கரைப் புகழ்ந்து கொண்டாடிவருகின்றனர். அதேசமயம் காங்கிரஸ் கட்சியினரும் சாவர்க்கரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பதாக விவாதம் எழுந்தது.

Published:Updated:
ராகுல் யாத்திரையை வரவேற்று வைக்கப்பட்ட சாவர்க்கர் போட்டோ

காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைஒபயணம் இப்போது கேரளா மாநிலத்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை வரவேற்கும்விதமாக நெடும்பாசேரி கோட்டாயி ஜங்ஷனில் 80 அடி நீளத்தில் ஃபிளெக்ஸ் ஒன்று வைக்கப்பட்டது. அதில் ரவீந்திரநாத் தாகூர், சந்திரசேகர ஆசாத், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் படங்களின் வரிசையில் சாவர்க்கரின் படமும் இடம்பெற்றிருந்தது. வழக்கமாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அமைப்பினர் மட்டுமே சாவர்க்கரைப் புகழ்ந்து கொண்டாடிவருகின்றனர். அதேசமயம் காங்கிரஸ் கட்சியினரும் சாவர்க்கரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு போர்டு வைக்கப்பட்டதாக விவாதம் எழுந்தது.

விவாதத்துக்குப் பிறகு சாவர்க்கர் போட்டோ மறைக்கப்படுகிறது
விவாதத்துக்குப் பிறகு சாவர்க்கர் போட்டோ மறைக்கப்படுகிறது

அதிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ அன்வர் சதாத்தின் வீடு அமைந்துள்ள கோட்டாயி ஜங்ஷன் பகுதியில் அந்த ஃபிளெக்ஸ் போர்டு வைக்கப்பட்டது விவாதத்தைச் சூடாக்கியது. சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சாவர்க்கர் படத்தின் மீது மகாத்மா காந்தி படத்தை ஒட்டினர். காங்கிரஸ் கட்சியினர் சாவர்க்கர் படத்தை மறைப்பதற்கு மட்டுமே காந்தி போட்டோவைப் பயன்படுத்தியதாக சி.பி.எம் கட்சியினர் கிண்டலடித்தனர். இதையடுத்து சாவர்க்கர் போட்டோ வைத்ததாக காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி செங்கமனாடு மண்டலத் தலைவர் சுரேஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து உள்ளூர் தலைவர்கள் சிலர் கூறுகையில், "உள்ளூர் அச்சகம் ஒன்றில், சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களின் புகைப்படங்களை அச்சடிக்கும்படி கூறியிருந்தோம். அச்சடித்ததும்... கவனிக்காமல் போஸ்டரை ஒட்டிவிட்டோம்" என்று விளக்கம் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ``சிபிஐ-எம் காங்கிரஸை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. டிசம்பர் மாதம் 1989-ம் ஆண்டு, வி.பி சிங்கை ஆதரித்து இந்துத்துவா அமைப்புகளுடன் கைகோத்திருந்தது அனைவருக்கும் தெரிந்த உண்மையே" என விமர்சித்திருக்கிறார்.

சாவர்க்கர் படத்தை மறைத்து காந்தி படம் வைக்கப்பட்டது
சாவர்க்கர் படத்தை மறைத்து காந்தி படம் வைக்கப்பட்டது

இது பற்றி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சுரேஷ் கூறும்போது, "நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குத்தான் ஃபிளெக்ஸ் போர்டு வைக்கச் சொன்னார்கள். 80 அடி நீள ஃபிளெக்ஸ் போர்டின் ஃபுரூப் சரியாகப் பார்க்க முடியவில்லை. நள்ளிரவு ஒரு மணிக்கு ஃபிளெக்ஸ் கிடைத்ததும், வைத்துவிட்டோம். அன்வர் சதாத் எம்.எல்.ஏ அழைத்துச் சொன்னபோதுதான் சாவர்க்கர் போட்டோ இருந்தது எனக்குத் தெரியவந்தது. ஒரு நிமிட கவனமின்மை யாத்திரையை விவாதமாக்கிவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக கட்சி என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்" என்றார்.