Published:Updated:

மேற்கு வங்கம்: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கிராம மக்கள்! - மாநில அரசிடம் விளக்கம் கேட்கும் உள்துறை

மம்தா பானர்ஜி - அமித் ஷா

மேற்கு வங்கம், பிர்பூம் பகுதியில் கலவரத்தில் வீடுகள் எரிக்கப்பட்டதில் பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே பிர்பூம் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன. ராம்பூரத் என்ற பகுதியில் நுழைந்த மர்மநபர்கள் அங்குள்ள 12 வீடுகளை வெளிப்புறமாகப் பூட்டி, வீடுகளுக்குள் எரிபொருளை ஊற்றித் தீ வைத்தனர் எனச் சொல்லப்படுகிறது. இதனால் உள்ளே சிக்கிக்கொண்டவர்களால் வெளியில் வர முடியவில்லை. இந்தக் கொடூர சம்பவத்தில் 10 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர்.

மேற்கு வங்கம்: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கிராம மக்கள்! - மாநில அரசிடம் விளக்கம் கேட்கும் உள்துறை

ஒருபுறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொல்லப்பட்ட பாது ஷேக்கின் ஆதரவாளர்கள்தான் இதைச் செய்தனர் என்ற தகவலும் பரவிவந்தன. இந்த நிலையில் இந்த வன்முறைச் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறிவருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று நேரில் சந்தித்து, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை வைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமித் ஷா
அமித் ஷா

அதையடுத்து, இந்தக் கலவரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், ``இந்தச் சம்பவம் ஒரு பயங்கரமான வன்முறை மற்றும் தீவைக்கும் களியாட்டம். இது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் குறிக்கிறது" எனக் கூறியிருந்தார்.

இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை ஆளுநர் தவிர்க்க வேண்டும்" என்று கடிதம் மூலம் கூறியிருந்தார். ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில், தற்போது இந்தச் சம்பவத்தால் மேலும் பிரச்னைகள் வெடித்த வண்ணம் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism