Published:Updated:

`அய்யாதுரை' ஸ்டாலின் இனி 'அய்யோ துரை' ஆவார்!'- கொதிக்கும் ராதாபுரம் இன்பதுரை

ராதாபுரத்தில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டது என்று ஸ்டாலின் பேசி உள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்படி பேசியுள்ளார் ஸ்டாலின். அவருக்கு சட்டம் தெரியாது.

இன்பதுரை
இன்பதுரை

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வெற்றி வழக்கில் மறு எண்ணிக்கை என்ற பரபரப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் அந்த தொகுதி இந்திய நாடே இன்று உற்றுப்பார்க்கும் தொகுதியாக மாறியிருக்கிறது. இந்த வழக்கு திமுக, அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் சமீபத்தில் இதுதொடர்பாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவின் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ குறித்து விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எம்எல்ஏ இன்பதுரை. அப்போது பேசியவர், ``கடந்த இரண்டு மூன்று நாட்களாக ராதாபுரம் தொகுதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து விவாதமாக உள்ளது.

அப்பாவு
அப்பாவு

ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பதால் இதுப்பற்றி தற்போது பேச கூடாது என்று இருந்தேன். 2016ல் வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க வேட்பாளரின் 291 வாக்குகள் செல்லாது என அறிவிக்க கேட்டது ஏனென்றால் அந்த தபால் வாக்குகள் முறையாக அட்டஸ்டட் செய்யப்படவில்லை. பெரும்பாலான தபால் வாக்குகளில் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே அட்டஸ்டட் செய்து இருந்தார். எனது புகாரை ஆராய்ந்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருப்பதை அறிந்து அதனை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் அதை நிராகரித்து. ஒரு தலைமை ஆசிரியர் அட்டஸ்டட் செய்தது தவறு என நான் மேற்கோள் காட்டினேன். இப்போது ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கிறார்கள்.

“ராதாபுரம் நிலை நமக்கும் வந்தால்..?” - திகிலூட்டும் தேர்தல் முடிவுகள்

உச்ச நீதிமன்றம் செல்வதற்கு காரணம் உள்ளது. உயர் நீதிமன்றம்தான் ஒரு தலைமை ஆசிரியர் அட்டஸ்டர் செய்யலாம் என்று கூறி உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் இதை எப்படி பார்க்கிறது என்பதை தெரிய விழைகிறேன். அதனாலேயே உச்ச நீதிமன்றம் சென்றுள்ளேன். மறு வாக்கு எண்ணிக்கைக்கு நான் தடை கேட்கவில்லை. தலைமை ஆசிரியர் அட்டஸ்டட் செய்தது சரி என உச்ச நீதிமன்றம் சொல்லட்டும். இது போன்ற வழக்கு இப்போது தான் வந்துள்ளது. ராதாபுரத்தில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டது என்று ஸ்டாலின் பேசி உள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்படி பேசியுள்ளார் ஸ்டாலின். அவருக்கு சட்டம் தெரியாது. இன்பதுரை எனக்கு என் அப்பா வைத்த பெயர். அதை ஸ்டாலின் இப்போது துன்ப துரை என விமர்சனம் செய்து உள்ளார்.

இன்பதுரை
இன்பதுரை

எனக்கு என் தந்தை அழகான தமிழ் பெயரை வைத்தது போல் ஸ்டாலினுக்கு அவரது தந்தை அய்யா துரை என்ற தமிழ் பெயரை வைத்து விட்டு பின்னர் அதை ஸ்டாலின் என மாற்றிவிட்டார் என்பதை கேள்விப்பட்டுள்ளேன். இந்த வழக்கில் நான் நிச்சயம் வெற்றிபெறுவேன். முடிவில் இன்பதுரை பேரின்பதுரையாக வெளிவருவேன். ஆனால் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றிபெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு நவம்பர் மாதம் வருகிறது. இதில் ஒரு வேளை ஸ்டாலினுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் தேர்தலில் 6 மாதம் போட்டியிட முடியாது. அப்போது `அய்யாதுரை' ஸ்டாலின் இனி அய்யோ துரை ஆவார். சட்டம், நியாயம் என் பக்கம் உள்ளது. என்னுடைய வழக்கு சட்டம் சம்மந்தப்பட்டது. உச்சநீதிமன்றம் எனக்கு சாதகமான தீர்ப்பை தரும் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றம்முறு எண்ணத்தோடு ஸ்டாலின் பேசி உள்ளார்'' என்றார்.

`நீதி, நியாயம் ஒருபோதும் தோற்காது...!'- மறுவாக்கு எண்ணிக்கை தீர்ப்பு குறித்து அப்பாவு