Published:Updated:

``ஊழலின் நான்கு தூண்கள் இவர்கள்தான்!" - எதிர்க்கட்சிகளைச் சாடிய பாஜக செய்தித் தொடர்பாளர்

பாஜக - ஷெசாத் பூனாவாலா

`உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்புள்ள பொதுச் சொத்துகள் யாவும் ஒரு குடும்பத்தின் பாக்கெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.' - ஷெசாத் பூனாவாலா

``ஊழலின் நான்கு தூண்கள் இவர்கள்தான்!" - எதிர்க்கட்சிகளைச் சாடிய பாஜக செய்தித் தொடர்பாளர்

`உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்புள்ள பொதுச் சொத்துகள் யாவும் ஒரு குடும்பத்தின் பாக்கெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.' - ஷெசாத் பூனாவாலா

Published:Updated:
பாஜக - ஷெசாத் பூனாவாலா

சமீபமாக இந்தியா முழுவதும் வேகமெடுத்திருக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் காரணமாக மத்திய பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாகச் சாடி வருகின்றன. மேற்கு வங்க அமைச்சர் கைது, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது, வேகமெடுக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை என அமலாக்கத்துறை வட்டாரம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஏஜென்சியின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர் முகாம் தரப்பினரை திணறடிக்கச் செய்திருக்கின்றன.

மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஏஜென்சிகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏவிவிட்டு, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயல்வதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஷெஹ்சாத் பூனவல்லா
ஷெஹ்சாத் பூனவல்லா

இந்த நிலையில், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, மத்திய அரசை இந்த விவகாரத்தில் சாடிய எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஷெசாத் பூனவல்லா, ``நாம் அனைவரும் ஜனநாயகத்தின் 4 தூண்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது, ஊழலின் 4 தூண்களைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். அதில் முதலாவது காங்கிரஸ், அவர்களின் தத்துவமே தனக்கு ஊழல் வேண்டும் என்பதுதான். அடுத்து, அதிக ஊழல் எனும் தேசியவாத காங்கிரஸ், மூன்றாவதாக உத்தவ் தாக்கரேவின் ஊழல் கட்சி. இறுதியாக ஆம் ஆத்மி" என எதிர்கட்சிகளை சாடினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காங்கிரஸ்
காங்கிரஸ்

மேலும் காங்கிரஸைக் குறிப்பிட்டுப் பேசிய பூனாவாலா, ``உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்புள்ள பொதுச் சொத்துகள் யாவும் ஒரு குடும்பத்தின் பாக்கெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கண்காணிப்பில்தான் நடந்தது" எனக் கூறினார்.