Published:Updated:

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை... ஐ.டி ரெய்டு அட்ராசிட்டிஸ்!

விஜய்
விஜய்

நடிகர் விஜய் மீதான வருமான வரிச் சோதனைகள் திரையுலகம் மட்டுமல்லாது, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தற்போது நடித்துவரும் `மாஸ்டர்‘ படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்றுவந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சென்று வலுக்கட்டாயமாக விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பெரும் வசூலை ஈட்டியதாகவும் அதற்கான வருமான வரி முறையாகச் செலுத்தப்படவில்லை என்றும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், அந்தப் படத்தின் ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இப்படியொரு கடுமையை இதுவரை காட்டியதில்லை! - பா.ஜ.க-வை சாடும் விஜய் ரசிகர்கள்

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக நடிகர் விஜய் அழைத்துச் செல்லப்பட்டதும், அவரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரிச் சோதனைகள் நடைபெற்றதும், திரைத்துறையைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாகத் தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் சோதனை செய்வதற்கு வருமான வரித் துறையினருக்கு அதிகாரம் உண்டு. முறையாக சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்துவது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து விஜய்யை வலுக்கட்டாயமாகத் தங்களின் காரில் வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றதுதான் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

விஜய்
விஜய்

"விஜய் என்ன கொலைக்குற்றமா செய்துவிட்டார்? அவர் நாட்டைவிட்டு ஓடிவிடக் கூடியவரா? படப்பிடிப்பு முடிந்த பிறகு விசாரணை நடத்தியிருக்கலாமே. படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன. அவரை ஏன் அவமானப்படுத்துகிறார்கள்? அவுட்டோர் ஷூட்டிங் என்றால் அதற்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்புக்காக அங்கு சென்றுள்ள துணை நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்றெல்லாம் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

விஜய்க்கு எதிரான வருமான வரிச் சோதனைகளின் பின்னணியில் மத்திய பா.ஜ.க அரசு இருப்பதாக அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. 2017-ல் விஜய் நடித்து வெளியான `மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி-க்கு எதிராகவும் `டிஜிட்டல் இந்தியா’வை விமர்சித்தும் வசனங்கள் இடம்பெற்றன. அதற்காக, நடிகர் விஜய்யை அப்போது பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்தனர். `ஜோசப் விஜய்' என்று விஜய்க்கு மதச்சாயம் பூசினார் ஹெச்.ராஜா. அந்த விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

அதன் தொடர்ச்சியாகவே தற்போது நடைபெற்றுள்ள வருமான வரிச் சோதனையும் பார்க்கப்படுகிறது. "விஜய் அரசியல் ஆர்வம்கொண்டிருக்கிறார். இளைஞர்கள், மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. எனவே, அவர் யாருக்கும் போட்டியாகிவிடக் கூடாது என்பதற்காக ரெய்டு நடத்தியுள்ளனர். அவரை அச்சுறுத்துவதற்காகவே இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லையே தவிர, அரசியல் உணர்வோடு திரைப்படங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி, பணமதிப்பு நீக்கம் ஆகியவை குறித்து அவரது திரைப்படங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. அந்த வசனங்களை உடனடியாக நீக்க வேண்டுமென்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து கூறியபோது, நடிகர் விஜய் என்ற பெயருக்கு முன்னால் ஜோசப் விஜய் என்று அழைத்து கிறிஸ்துவ மதச்சாயம் பூசினார். அதேபோல, அ.தி.மு.க அமைச்சர்களும் விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

இந்நிலையில், வருமான வரித்துறையினர் நடிகர் விஜய்க்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்துவது ஏதோ ஒருவகையில் அவரை அச்சுறுத்துகிற நடவடிக்கையாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்திவிடலாம் என மத்திய பா.ஜ.க அரசு கருதுமேயானால் அது வெறும் பகல்கனவாகத்தான் முடியும்” என்று கூறியுள்ளார்.

கேரளாவிலிருந்தும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் எழுந்துள்ளது. கேரளாவின் தொழில்துறை அமைச்சரான இ.பி.ஜெயராஜன் தன் ஃபேஸ்புக் பதிவில், "நடிகர் விஜய்யை கஸ்டடியில் எடுத்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. தங்களை விமர்சிப்பவர்களை எந்த வழியிலாவது அடக்குவதுதான் சங்பரிவாரின் வழிமுறை. நாட்டை சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் ஜி.எஸ்.டி-யையும் `மெர்சல்' திரைப்படத்தில் விஜய் விமர்சித்திருந்தார். `சர்கார்' சினிமாவில் அ.தி.மு.க அரசை விமர்சித்தார். விஜய் மீது மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டதற்கு இதுதான் காரணம்.

சங்பரிவாரின் செயல்பாடுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் சினிமா நடிகர்கள், எழுத்தாளர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது, பொய் வழக்கு போட்டு பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பேசுபவர்களையும் போராடுபவர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள். குடியுரிமைச் சட்டத் திருத்தம் அநீதி எனக் கூறிய மலையாள திரைத்துறையினர் வருமான வரித்துறை ரெய்டு குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் பேசியதையும் நடிகர் விஜய்க்கு எதிரான நடவடிக்கையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றாகக் குரல்கொடுக்க வேண்டும்.

இ.பி.ஜெயராஜன்
இ.பி.ஜெயராஜன்

சங்பரிவாரின் செயல்பாடுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் சினிமா நடிகர்கள், எழுத்தாளர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது, பொய் வழக்கு போட்டு பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பேசுபவர்களையும் போராடுபவர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள். குடியுரிமைச் சட்டத் திருத்தம் அநீதி எனக் கூறிய மலையாள திரைத்துறையினர் வருமான வரித்துறை ரெய்டு குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் பேசியதையும் நடிகர் விஜய்க்கு எதிரான நடவடிக்கையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றாகக் குரல்கொடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்களுக்கு எதிரான வருமான வரிச் சோதனை என்பது புதிதல்ல. சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பாக நடைபெற்ற இதேபோன்ற வருமான வரிச் சோதனை ஒன்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.1971-ம் ஆண்டு. தி.மு.க-வுக்கு 15 எம்.பி-க்கள் இருந்தனர். அவர்களின் ஆதரவு மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி தங்கள் கைக்குள் இருக்க வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி நினைத்தார். தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்தால், காங்கிரஸ் கட்சியின் உதவியை கருணாநிதி நாடி வருவார் என்பது இந்திரா காந்தியின் கணக்கு.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

தி.மு.க-வின் முக்கிய முகமாக இருந்த எம்.ஜி.ஆர், அப்போது நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியிருந்த எம்.ஜி.ஆருக்காக வருமான வரித்துறை மற்றும் வருவாய் கண்காணிப்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காத்திருந்தார்கள். அவர்களின் கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். ஏன் அந்த ரெய்டு என்பதை அப்போது எம்.ஜி.ஆர் அறிந்திருக்கவில்லை.

வருமான வரிச் சோதனையால் சோர்ந்துபோயிருந்த எம்.ஜி.ஆரிடம், பிரதமர் இந்திரா காந்தியைப் பாருங்கள்... எல்லாம் சரியாகிவிடும் என்று சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து இந்திரா காந்தியை அவர் சந்தித்தார். பிரச்னை தீர்ந்தது. மறு வருடமே தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேறிய சம்பவம் நிகழ்ந்தது. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேறியதற்கு அந்த வருமான வரிச் சோதனையே காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும், அதுவும் ஒரு காரணம்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

`ரெய்டு' விஜய், `தனி வழி' ரஜினி, பிரசாந்த் கிஷோர் பூகம்பம்..! மிஸ்டர் கழுகின் அரசியல் அப்டேட்ஸ்

விஜய் மீதான வருமான வரிச் சோதனையில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்று ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க-வினர் சொல்லிவருகிறார்கள். ஆனால், உண்மையை வெளிப்படையாக தெரிவிப்பதுபோல், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புக்கு அனுமதி தரக்கூடாது என்று பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

விஜய் மீதான சோதனை என்பதுடன் இது நின்றுவிடவில்லை. விஜய் மீது வருமான வரிச் சோதனை ஏவப்படுவதற்கு சற்று முன்னதாக ரஜினி மீதான வருமான வரி வழக்கு முடித்துவைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எல்லா உண்மைகளும் பளிச்சென்று தெரிந்துவிடும்.

பின் செல்ல