Published:Updated:

மகாராஷ்டிரா: முதல்வர் மகனுக்கு நெருக்கமான அமைச்சர்களின் நண்பர்களை குறிவைத்து ரெய்டு!

அனில் பரப், ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர்களின் நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

மகாராஷ்டிரா: முதல்வர் மகனுக்கு நெருக்கமான அமைச்சர்களின் நண்பர்களை குறிவைத்து ரெய்டு!

மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர்களின் நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

Published:Updated:
அனில் பரப், ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை உட்பட மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. ஏற்கெனவே கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை மாநகராட்சியின் சிவசேனா நிலைக்குழுத்தலைவர் யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அதோடு சேர்த்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் இல்லத்திலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டு தொடர்ந்து மூன்று நாள்கள் நடந்தது. தாவூத் இப்ராஹிம் சகோதரியுடன் நில வர்த்தகம் செய்து கொண்டதாக தேசியவாத காங்கிரஸ் மூத்த அமைச்சர் நவாப் மாலிக் சமீபத்தில் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் மகள் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் சுஜித் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தியது.

இந்த நிலையில், தற்போது சிவசேனாவினர் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்த ஆரம்பித்துள்ளனர். சிவசேனா அமைச்சர்களின் நண்பர்களை குறிவைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. கேபிள் தொழிலதிபர் சதானந்த் கதம், யுவசேனா பிரமுகர் ராகுல் கனல், வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரி பஜ்ரங் கர்மாடே ஆகியோரின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

ஜாதவ் இல்லத்திற்கு வெளியில் ரிசர்வ் போலீஸார்
ஜாதவ் இல்லத்திற்கு வெளியில் ரிசர்வ் போலீஸார்

ஆதித்ய தாக்கரே நண்பர்

ரெய்டு நடத்தப்பட்டவர்களில் ராகுல் கனல் யுவசேனாவில் முக்கிய பிரமுகராக இருப்பதோடு, ஷிர்டி சாய்பாபா டிரஸ்ட் அறங்காவலராகவும் இருக்கிறார். ஆதித்ய தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ராகுல் கனல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆதித்ய தாக்கரே மீது அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. தொழிலதிபர் சதானந்த் கதம் சிவசேனாவின் மூத்த அமைச்சர் அனில் பரப்பிற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

அதோடு சிவசேனா தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கதம் சகோதரர் ஆவார். தேர்தல் நேரத்தில் இவர்கள் மூலம் தான் சிவசேனா தேர்தல் செலவுகளை பார்த்துக்கொள்ளும் என்று கருதி அவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரி பஜ்ரங் சிவசேனா அமைச்சர் அனில் பரப்பின் கீழ் பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையின் போது பஜ்ரங்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அழைத்து வாக்குமூலம் பெற்றனர். விசாரணைக்குப் பிறகு பஜ்ரங் நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த ரெய்டு சிவசேனா தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் மூத்த அமைச்சர்களை சிறையில் தள்ளிவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக சிவசேனா அமைச்சர்களையும் கைது செய்யவேண்டும் என்ற நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ரெய்டு குறித்து மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே கூறுகையில், ``மத்திய விசாரணை ஏஜென்சி இதற்கு முன்பு மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது மகாராஷ்டிராவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா இதற்கு அடிபணியாது" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

மாநகராட்சி தேர்தலுக்கு முன்பு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை மக்கள் மத்தியில் களங்கப்படுத்தி அதன் மூலம் இரு கட்சிகளின் செல்வாக்கை சரித்து ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரம் காட்டுவதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

பா.ஜ.க-வின் ஏ.டி.எம்

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பா.ஜ.க தலைவர்களின் ஏ.டி.எம் மெஷின்கள். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மும்பையில் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். 4 அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக போலீஸில் புகார் செய்துள்ளேன். போலீஸார் விரைவில் அது குறித்து விசாரணை நடத்துவார்கள். இதன் மூலம் சில அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள். வேறு எந்த மாநிலத்திலும் எதுவும் கிடைக்காததால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் மட்டும் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்திக்கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.