Published:Updated:

சென்னை மாநகராட்சி 23-வது வார்டு; அதிமுக, திமுக-வை பின்னுக்குத் தள்ளி சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

சுயேச்சை வேட்பாளர்

சென்னை மாநகராட்சி 23-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ராஜன் 3,953 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

சென்னை மாநகராட்சி 23-வது வார்டு; அதிமுக, திமுக-வை பின்னுக்குத் தள்ளி சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

சென்னை மாநகராட்சி 23-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ராஜன் 3,953 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

Published:Updated:
சுயேச்சை வேட்பாளர்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838. இந்த வார்டுகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாகக் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது.

சுயேச்சை வேட்பாளர்
சுயேச்சை வேட்பாளர்

சென்னை மாநகராட்சி 23-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராஜன் தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு 3,953 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். சென்னை மாநகராட்சி 23-வது வார்டில் அ.தி.மு.க 2,369 வாக்குகள் பெற்று 2-ம் இடத்திலும், தி.மு.க 2,271 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism