Published:Updated:

``இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது; சனாதன தர்மம்தான் இங்கு இருக்கும்!" - பாஜக எம்.பி பிரக்யா சிங்

பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்குர்

``இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது. சனாதன தர்மம்தான் இங்கு இருக்கும். அது எங்களுடைய பொறுப்பு" - பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்குர்

``இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது; சனாதன தர்மம்தான் இங்கு இருக்கும்!" - பாஜக எம்.பி பிரக்யா சிங்

``இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது. சனாதன தர்மம்தான் இங்கு இருக்கும். அது எங்களுடைய பொறுப்பு" - பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்குர்

Published:Updated:
பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்குர்

நபிகள் நாயகம் குறித்து, பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தின் விளைவால், இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவைச் சாடிவருகின்றன. இதற்கு இந்திய அரசு தரப்பிலிருந்து, அனைத்து மதங்களும் இங்கு சமமாகவே பார்க்கப்படுகின்றன என விளக்கமளிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த விவாகரத்தில், இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நுபுர் ஷர்மாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், `இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது... இங்கு சனாதன தர்மம்தான் இருக்கும்!' எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நபிகள் நாயகம் குறித்து நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உண்மையைச் சொல்வது கிளர்ச்சியென்றால், நானும் கிளர்ச்சியாளர்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என இன்று பதிவிட்டிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரக்யாவிடம், நுபுர் ஷர்மா மீதான கொலை மிரட்டல்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரக்யா, ``இந்த மத நம்பிக்கையில்லாதவர்கள் எப்போதும் இதுபோன்று செய்கிறார்கள். அவருக்கும் அப்படிதான் கொலைமிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நமது தெய்வங்களை அவர்கள் சிதைக்கிறார்கள், அதைப்பற்றிப் படமெடுக்கிறார்கள். இதையேதான் பலவருடங்களாக அவர்கள் செய்துவருகிறார்கள். இதுவே அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது. சனாதன தர்மம்தான் இங்கு இருக்கும். அது எங்களுடைய பொறுப்பு, நாங்கள் அதை செய்வோம்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism