திபெத்தின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ஜம்மு-காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தலாய் லாமா அங்கு சென்றார். தலாய் லாமாவை, நூற்றுக்கணக்கான புத்த மதத்தவர்கள் வாத்தியங்கள் இசைத்தும், பூக்களைத் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.
சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட, திபெத் தொடர்பான பிரச்னைகளை இந்தியா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று சீனா சமீபத்தில் இந்தியாவை விமர்சித்தது. இதற்கு பதிலடி கொடுத்த மத்திய வெளிவிவகார அமைச்சகம், தலாய் லாமாவை இந்தியாவில் விருந்தினராக நடத்துவது இந்திய அரசாங்கத்தின் நிலையான கொள்கை என்று கூறி சீனாவின் விமர்சனத்தை சாடியிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலாய் லாமா, "இந்தியாவும் சீனாவும் போட்டி நாடுகள் மட்டுமல்ல, அண்டை நாடுகளும்கூட. இரு நாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தை மூலமாகவும், அமைதியான வழிகளிலும் தங்கள் எல்லைப் பிரச்னையை தீர்க்க வேண்டும். இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது" எனத் தெரிவித்தார்.
