சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரி நடா சௌரி, "கொரோனா தொற்றுக்குப் பிறகு வெற்றிகரமான மேக்ரோ எகனாமிக் மேலாண்மை, இந்தியாவின் பொருளாதாரம் வலுவாகுவதற்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக தற்போதைய ரஷ்ய உக்ரைன் போரினால் உருவாகும் பொருளாதார நெருக்கடியின் வீழ்ச்சியை எதிர்கொள்ள சிறந்த நிலையில் இந்தியா உள்ளது. வாங்கும் திறன் சமநிலை (PPP) விதிமுறைகளில், மொத்த உலகப் பொருளாதாரத்தில் சுமார் ஏழு சதவிகிதத்தை இந்தியா கைவரப்பெற்றுள்ளது.

வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவின் வளர்ச்சி, உலகப் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா எதிர்கால தொற்றுநோய்களை நிர்வகிப்பதில் ஓர் அங்கமாகப் பரிணமித்துள்ளது.
தொற்றுநோயின் மேக்ரோ பொருளாதார மேலாண்மை ஒரு வலுவான பொருளாதார மீட்புக்கு வழிவகுத்தது. இருப்பினும் பொருளாதார மீட்பு முழுமையடையாமல் உள்ளது. என்றாலும், உக்ரைன் - ரஷ்யா போர் நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா இன்று சிறந்த இடத்தில் உள்ளது. ஆனால், உலகப் பொருளாதாரம் இன்று மிகவும் கடினமான நிலையை எதிர்கொண்டுவருகிறது” என்று கூறினார்.
ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, ``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2% -ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. உலகுக்கே நல்ல செய்தி” என்றார்.
