Published:Updated:

``பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா மாறி வருகிறது!" - ஜே.பி.நட்டா

ஜேபி நட்டா ( ட்விட்டர் )

``பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா மாறி வருகிறது'' என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருக்கிறார்.

``பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா மாறி வருகிறது!" - ஜே.பி.நட்டா

``பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா மாறி வருகிறது'' என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருக்கிறார்.

Published:Updated:
ஜேபி நட்டா ( ட்விட்டர் )

தெற்கு  டெல்லியில் நேற்று நடைபெற்ற மாவட்ட பா.ஜ.க அலுவலக திறப்பு விழாவில் கட்சித் தொண்டர்களிடம் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா மாறி வருகிறது. மோடி தலைமையிலான அரசு கொரோனா காலத்தில் இந்தியாவை சிறப்பாக கையாண்டது. உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை மட்டும் மோடி அரசு காப்பாற்றவில்லை, மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களையும் காப்பாற்றியது. மோடி அரசாங்கம் எப்போதும் அனைத்து பிரச்னைகளையும் திறமையாக தீர்க்க முயற்சி செய்து வருகிறது. 

ஜேபி நட்டா
ஜேபி நட்டா

இது மாறிவரும் இந்தியா. இது மோடிஜியின் அதிகாரம் பெற்ற இந்தியா என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மற்றும் பிரதமர் ஆவாஸ் யோஜனா ஆகிய திட்டங்களைத் தடுத்து, லட்சக்கணகான மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை தடுத்துள்ளார்'' என்றார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism