Published:Updated:

``இந்தியாவில் போலீஸ் ராஜ்ஜியம்... மோடிதான் அதற்கு ராஜா!" - ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி - மோடி

``வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி, அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களைச் சிறையில் அடைக்குமாறு இந்த நாட்டின் ராஜா உத்தரவிட்டிருக்கிறார்." - ராகுல்

``இந்தியாவில் போலீஸ் ராஜ்ஜியம்... மோடிதான் அதற்கு ராஜா!" - ராகுல் காந்தி விமர்சனம்

``வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி, அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களைச் சிறையில் அடைக்குமாறு இந்த நாட்டின் ராஜா உத்தரவிட்டிருக்கிறார்." - ராகுல்

Published:Updated:
ராகுல் காந்தி - மோடி

நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர்மீது அமலாக்கத்துறையில் முன்னதாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதையடுத்து விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி நேற்று ஆஜரானார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை விஜய்சவுக் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ராகுல் காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதையடுத்து, சில மணி நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி, அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களை சிறையில் அடைக்குமாறு இந்த நாட்டின் ராஜா உத்தரவிட்டிருக்கிறார். நான் போலீஸார் காவலில் வைக்கப்பட்டாலும், மக்களுக்காகக் குரல் எழுப்புவதை அவர்கள் குற்றம் என்று கூறினாலும், ஒருபோதும் எங்கள் உறுதிப்பாட்டை அவர்களால் உடைக்க முடியாது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்தியா ஒரு போலீஸ் ராஜ்ஜியம்… அதில் மோடிதான் ராஜா” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!