Election bannerElection banner
Published:Updated:

`இந்தியாவின் இந்தநிலைக்கு மோடிதான் காரணம்' - ஆஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா

மோடி
மோடி

அந்தக் கட்டுரையில் கொரோனா விஷயத்தை மோடி அரசு முறையாகக் கையாளவில்லை என்று சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது.

ஆஸ்திரேலிய ஊடகமான ‘தி ஆஸ்திரேலியன்’, `மோடி இந்தியாவை ஒரு வைரஸ் பேரழிவுக்கு இட்டுச் சென்றுவிட்டார்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தது.

அந்தக் கட்டுரையில் கொரோனா விஷயத்தை மோடி அரசு முறையாகக் கையாளவில்லை என்று சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்தக் கட்டுரை முதலில் `தி டைம்ஸ்' இணையத்தில்தான் வெளியாகியிருந்தது.

அந்த ஊடகத்தின் ஆசிய செய்தியாளர் பிலிப்ஸ் செர்வெல்லால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இவ்வாறாகத் தொடங்குகிறது, “நான் இவ்வாறான கூட்டத்தைப் பார்த்ததில்லை” என மேற்கு வங்கத் தேர்தலில் தனக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் நரேந்திர மோடி.

இந்தக் கட்டுரையைத்தான் மறு ஆக்கம் செய்திருந்தது `தி ஆஸ்திரேலியன்' ஊடகம்.

இந்தக் கட்டுரையின் இணைப்பைத் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``ஆணவம், தேசிய வெறி மற்றும் அதிகாரத்துவ இயலாமை ஆகியவை இணைந்து இந்தியாவின் இந்தநிலையை உருவாக்கியுள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்தக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய தூதரகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறது இந்திய வெளியுறவு அமைச்சகம்.

`அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக்கொண்டு கீழ்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக’ அந்த மறுப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

``கொரோனாவைக் கட்டுப்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா செய்திருக்கிறது" என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு