Published:Updated:

``நபிகள் நாயகம் விவகாரத்தை இந்தியா சரியாக கையாள வேண்டும்!" - வலியுறுத்தும் சீனா

சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங்-வென்பின்

`வெவ்வேறு நாகரிகங்களையும், வெவ்வேறு மதங்களையும் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்' என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

நபிகள் நாயகம் தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேசிய கருத்து சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்தியா தரப்பில் அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த சர்ச்சைக் கருத்து விவகாரம் இந்தியாவில் பூதாகரமாக வெடித்திருக்கிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உட்பட பல மாநிலங்களில் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நுபுர் சர்மா
நுபுர் சர்மா

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், ``வெவ்வேறு நாகரிகங்களையும், வெவ்வேறு மதங்களையும் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். அனைவரும் சமத்துவமாக இணைந்து வாழ வேண்டும் என்று சீனா விரும்புகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்  வாங்-வென்பின்
சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங்-வென்பின்

நமக்கு இடையிலான வேறுபாடுகளைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியா நிலைமையை சரியாக கையாள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism