Published:Updated:

``நானும், இந்தியாவும் எங்களால் முடிந்ததைச் செய்வோம்" - உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி உறுதி!

ஜெலன்ஸ்கி - மோடி

``நான் இதை ஓர் அரசியல் அல்லது பொருளாதாரப் பிரச்னையாகப் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இது மனிதநேயத்தின் பிரச்னை, மனித விழுமியங்களின் பிரச்னை." - மோடி

Published:Updated:

``நானும், இந்தியாவும் எங்களால் முடிந்ததைச் செய்வோம்" - உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி உறுதி!

``நான் இதை ஓர் அரசியல் அல்லது பொருளாதாரப் பிரச்னையாகப் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இது மனிதநேயத்தின் பிரச்னை, மனித விழுமியங்களின் பிரச்னை." - மோடி

ஜெலன்ஸ்கி - மோடி

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைனும் சேர முன்வந்ததையடுத்து, அந்த நாட்டின்மீது ரஷ்யா போர்தொடுக்க ஆரம்பித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கிய இந்தப் போரானது ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவருகிறது. இதில் அமெரிக்கா போன்ற நாடுகள் நேரடியாக ரஷ்யாவுக்கு எதிராக நின்று, உக்ரைனுக்கு ஆயுத உதவி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை அளித்துவருகின்றன.

மோடி - ஜெலன்ஸ்கி
மோடி - ஜெலன்ஸ்கி

ஆனால் போரின் ஆரம்பம் முதல் `பேச்சுவார்த்தை ஒன்றே போருக்குத் தீர்வு' என நடுநிலையாக இருந்துவருகிறது இந்தியா. இந்த நிலையில் போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, போருக்குத் தீர்வு காண தங்களால் முடிந்ததைச் செய்வோம் உறுதியளித்திருக்கிறார்.

ஹிரோஷிமாவில் நேற்று ஜி-7 மாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட பல நாடுகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்துகொண்டார். இதில் ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவே மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி-7 மாநாடு
ஜி-7 மாநாடு

அப்போது பேசிய மோடி, ``இந்த மோதலுக்குத் தீர்வு காண நானும் இந்தியாவும் தனிப்பட்ட முறையில் எங்களால் முடிந்ததைச் செய்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நாங்கள் (ஜெலன்ஸ்கியுடன் மோடி) தொலைபேசியில் பேசினோம், ஆனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு, சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உக்ரைனில் நடந்த போர் முழு உலகுக்கும் மிகப் பெரிய பிரச்னை. உலகம் முழுவதிலும் இது பல்வேறு தாக்கங்கள் ஏற்படுத்துகின்றன. ஆனால். நான் இதை ஓர் அரசியல் அல்லது பொருளாதாரப் பிரச்னையாகப் பார்க்கவில்லை.

மோடி - ஜெலன்ஸ்கி
மோடி - ஜெலன்ஸ்கி

என்னைப் பொறுத்தவரை இது மனிதநேயத்தின் பிரச்னை, மனித விழுமியங்களின் பிரச்னை. போரின் வலி என்னவென்பதை எங்களில் எவரையும் விடவும் உங்களுக்கு (ஜெலன்ஸ்கி) நன்கு தெரியும். ஆனால் கடந்த ஆண்டு எங்கள் மாணவர்கள் உக்ரைனிலிருந்து திரும்பி வந்ததும், அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து அவர்கள் தெரிவிக்கையில் நீங்களும் உக்ரைன் குடிமக்களும் அடைந்த வலியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது" என்றார்.