Published:Updated:

``சீனாவின் ஊடுருவலை இந்திய ராணுவம் முறியடித்துவிட்டது!" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

``அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துவிட்டது." - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று காலை தொடங்கிய கூட்டத்தில், டிசம்பர் 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மதியம் 12 மணியளவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவை, மாநிலங்களவையில் அடுத்தடுத்து விளக்கமளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மதியம் 12 மணியளவில் மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

அதைத் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ``அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துவிட்டது. சீன ராணுவத்துடனான இந்த மோதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இருப்பினும் இந்திய வீரர்கள், சீன ராணுவத்தினருக்கு பதிலடி தந்து அவர்களின் முகாமுக்கே அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டனர். அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு உடனடியாக சீனாவுடன் ராஜதந்திர வழிகள் மூலம் பேசியது. நமது எல்லைகளைப் பாதுகாக்க நம்முடைய வீரர்கள் உறுதியெடுத்திருக்கின்றனர். அதற்கெதிராக வரும் எத்தகைய சவால்களையும் முறியடிக்க, நமது படைகள் தயாராக இருப்பதையும் இந்தச் சபைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.