Published:Updated:

`நீண்டகாலப் பொருளாதார மந்தநிலையின் மத்தியில் நாம் இருக்கிறோம்!' - எச்சரிக்கும் மன்மோகன் சிங்

சத்யா கோபாலன்

மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Manmohan Singh
Manmohan Singh ( ANI )

உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனை சரிந்துவருகிறது. பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து, முதலீடுகளும் வெகுவாகக் குறைந்துள்ளன.

Economy Down
Economy Down

இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைப் பற்றிப் பல பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கும் மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மன்மோகன் சிங், ``2018-19 -ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார வீழ்ச்சியை இந்தியாவால் தாங்கிக்கொள்ள முடியாது. பழிவாங்கும் அரசியலை விட்டு விட்டு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

Manmohan Singh
Manmohan Singh
ANI

உற்பத்தித் துறையின் வளர்ச்சி 0.6% ஆக இருப்பது வருத்தமளிக்கிறது. இதற்குப் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற மோடி அரசின் தவறான அமலாக்கமே காரணம். அந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரக்கூடிய சூழ்நிலையிலிருந்தும் மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது.

Vikatan

ஒரே காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்திருப்பது நீண்டகாலப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நாம் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. பொருளாதார மந்தநிலையால் கார் போன்ற பொருள்கள் வாங்கும் மக்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்” போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Money
Money

1991-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பணியாற்றியவர் மன்மோகன் சிங். தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையில் பெரும்பங்கு வகித்தவர்.