Published:Updated:

உக்ரைன் விவகாரத்தை கையாண்ட விதம்... 5 மாநில தேர்தலில் எதிரொலிக்குமா?! - அமித் ஷா பதில்

அமித் ஷா - நரேந்திர மோடி

உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களைப் பத்திரமாக வெளியேற்றியிருப்பதாகவும், சட்டமன்ற தேர்தலில் இது பாஜகவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரத்தை கையாண்ட விதம்... 5 மாநில தேர்தலில் எதிரொலிக்குமா?! - அமித் ஷா பதில்

உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களைப் பத்திரமாக வெளியேற்றியிருப்பதாகவும், சட்டமன்ற தேர்தலில் இது பாஜகவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அமித் ஷா - நரேந்திர மோடி

ஐந்து மாநில தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உக்ரைன் விவகாரத்தை இந்தியா கையாண்ட விதம் குறித்தும் அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அமித் ஷா ``ரஷ்யா- உக்ரைன் பிரச்னையை ஜனவரி மாதம் முதலே இந்திய அரசாங்கம் கண்காணித்து வருகிறது. பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்ய மொழி பேசும் குழுவை அதன் அண்டை நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறோம். உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்காக 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டத்தை அரசு தொடங்கியது. உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்குப் பிப்ரவரி 15-ம் தேதி அரசாங்கம் சார்பில் முதல் ஆலோசனை வழங்கப்பட்டது

உக்ரைன் மக்கள்
உக்ரைன் மக்கள்

ரஷ்ய ராணுவ தாக்குதல் காரணமாக உக்ரைன் வான்வெளி பிப்ரவரி 24 முதல் மூடப்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அதன் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து வழியாக விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மார்ச் 4-ம் தேதி வரை 16 ஆயிரம் இந்தியர்களை உக்ரைனில் இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கிறோம். உக்ரைன்- ரஷ்ய போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களைப் பத்திரமாக வெளியேற்றியிருக்கிறோம். சட்டமன்ற தேர்தலில் இது பாஜகவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தலாம். உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உட்பட, தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism