Published:Updated:

மின் இணைப்புடன் ஆதார் இணைத்தவர்களின் தகவல்கள் அழிந்துவிட்டதா?- வெளியான தகவலும், மின்வாரிய விளக்கமும்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

டிசம்பர் மாதம் 4 முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாகத் தகவல் வெளியானது.

மின் இணைப்புடன் ஆதார் இணைத்தவர்களின் தகவல்கள் அழிந்துவிட்டதா?- வெளியான தகவலும், மின்வாரிய விளக்கமும்

டிசம்பர் மாதம் 4 முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாகத் தகவல் வெளியானது.

Published:Updated:
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

தமிழ்நாட்டில் விவசாயம், விசைத்தறி, குடிசை வீடுகள் என மின் மானியம் பெறும் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 2.67 கோடி. இந்த நிலையில், மின் மானியம் பெறும் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி, மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,816 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.

இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை வரும் 31-ம் தேதி வரை இணைக்கலாம் என அரசு கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது. இதற்கிடையில், டிசம்பர் மாதம் 4 முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. மேலும், அவற்றை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அது தொடர்பாக நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டு, மின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆதார்
ஆதார்

இது தொடர்பாக மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய மின்வாரிய விநியோகப் பிரிவின் இயக்குநர் சோழிங்கராஜன், "பொதுமக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காகப் பதிவுசெய்த தரவுகள் அழிந்துவிட்டதாக தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரித்துவருகிறோம். விரைவில் மறுப்பு அறிக்கை வெளியிடப்படும். நுகர்வோர் பதிவுசெய்த தரவுகள் அனைத்தும் எங்களிடம் பத்திரமாக இருக்கின்றன" என்றார்.