Published:Updated:

``மத்திய அரசே பொய் சொல்லாதே!" - பாஜக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் - அதிர்ந்துபோன நிர்வாகிகள்

அதிர்ந்துபோன பாஜக நிர்வாகிகள்

சொத்துவரி உயர்வைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு..!

``மத்திய அரசே பொய் சொல்லாதே!" - பாஜக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் - அதிர்ந்துபோன நிர்வாகிகள்

சொத்துவரி உயர்வைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு..!

Published:Updated:
அதிர்ந்துபோன பாஜக நிர்வாகிகள்

கண்டன ஆர்ப்பாட்டம்:

தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திவருகின்றன. அந்த வகையில், இன்று (08.04.2022) சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் சொத்து வரி உயர்வை எதிர்த்து பா.ஜ.க சட்டமன்ற கொறடா நயினார் நாகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
பாஜக பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தக் கூட்டத்தில், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி போன்ற பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களும். வி.பி.துரைசாமி, எம். சக்கரவர்த்தி மற்றும் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். காலை 10:30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த நேரத்தில் எல்லாம் ஒரு 50 உறுப்பினர்கள் தான் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டமன்ற வெளிநடப்பு:

`தற்போது சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டமே சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் தான். அங்குச் சட்டமன்றத்தில் இருப்பவர்கள் எப்படி இங்கே வருவார்கள்' என்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் கேட்க, `சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு இங்கே வருவார்கள். அது என்ன எங்களுக்கு புதுசா' என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

சட்டமன்ற உறுப்பினர்கள் வருகைக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகள் சிலர் தி.மு.க-வைத் தாக்கி பேசிக்கொண்டிருந்தார்கள். சுமார் 11:30 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது கராத்தே தியாகராஜன் பேசிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் வி.பி.துரைசாமி பேசினார், அவர் பேசியது தமிழக முதல்வரை நையாண்டி செய்தது போல இல்லை. நயினார் நாகேந்திரனை நக்கல் செய்தது போல இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அடுத்ததாக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பேசி கூட்டத்தை முடித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குரூப் போட்டோ எடுக்கணும் வாங்க!

உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மேடையிலிருந்தவர்கள், `அப்படியே மகளிர் அணியில இருக்குறவங்க எல்லாம் வாங்க. கொஞ்சம் முன்னாடி மீடியாவை பாத்து திரும்புங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்' என்றதும், அங்கிருந்த கூட்டம் முன்னால் திரும்பி போட்டோ எடுத்துக்கொண்டார்கள். போட்டோ எடுத்து அடுத்தவர் பேச ஆரம்பித்ததுமே அந்த கூட்டம் மெல்ல முன்னிருந்து பின்னுக்குச் சென்றது.

குரூப் போட்டோ எடுக்கணும் வாங்க
குரூப் போட்டோ எடுக்கணும் வாங்க

ஆர்ப்பாட்டத்தின் நடுவே, ஆளும் தமிழக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது கோஷங்களை மைக்கில் கூறியவர், `மத்திய அரசே பொய் சொல்லாதே' என்று கூறினார். அதைக் கேட்டதும் மேடையிலிருந்து நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் ஒரு நிமிடம் ஜர்க் ஆகி கோஷம் எழுப்பியவரின் முகத்தைப் பார்த்தனர். `இல்லை இல்லை மத்திய அரசுக்கு எதிராகப் பொய் சொல்லாதே' என்று கோஷத்தைச் சரி செய்தார்.

மேடையில் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் உறுப்பினர்கள் வரை பலரும் ஆவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே கீழே நின்ற உறுப்பினர்களோ கூட்டம் கூட்டமாக நின்று பேசுவதும், ஒருவருக்கொருவர் போட்டோ எடுத்துக்கொள்வதுமாகவும், சுண்டல், பட்டாணி என்று வாங்கி உண்பதாகவும் தான் இருந்தார்கள். சொல்லப்போனால், அங்கு வந்திருந்த சுமார் 200 பேரில் 50 பேர் மேடையில் என்ன பேசினார்கள் என்று கேட்டிருந்தாலும் ஆச்சர்யம் தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism