Published:Updated:

‘டார்கெட்.... 50’ - ஆபரேஷன் அமித் ஷா!

அமித் ஷா!
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா!

உள்துறை அமைச்சரின் பயணத்துக்காகவே எல்லைப் பாதுகாப்புப் படையில் சிறிய ரக விமானங்கள் உள்ளன.

‘டார்கெட்.... 50’ - ஆபரேஷன் அமித் ஷா!

உள்துறை அமைச்சரின் பயணத்துக்காகவே எல்லைப் பாதுகாப்புப் படையில் சிறிய ரக விமானங்கள் உள்ளன.

Published:Updated:
அமித் ஷா!
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா!

‘நாங்கள் நிஜமாகவே கூட்டணியில்தான் இருக்கிறோம்’ என்பதை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் அமித் ஷா வந்தபோது உறுதி செய்தன. நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழகம் வந்து சென்றிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாள்களிலும் அமித் ஷா சென்னையில் இருந்தபோது #GoBackAmitshah ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனாலும், ‘வலிக்கவே இல்லையே’ என்று அவரது வருகை தமிழக பா.ஜ.க-வினரை உற்சாகப்படுத்தியுள்ளது. அமித் ஷா விசிட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* உள்துறை அமைச்சரின் பயணத்துக்காகவே எல்லைப் பாதுகாப்புப் படையில் சிறிய ரக விமானங்கள் உள்ளன. இப்படிப்பட்ட எம்ப்ரயர் ரக விமானத்தில் நவம்பர் 21-ம் தேதி மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு அமித் ஷா வந்தடைந்தார்.

* பா.ஜ.க சார்பில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களையே மிரட்டும் வகையில், அ.தி.மு.க-வினரும் வரவேற்பு கோதாவில் களமிறங்கினர். சென்னையிலுள்ள ஆறு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களிடமும் வரவேற்புக்கான பொறுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்திருந்தார். 12,000 அ.தி.மு.க-வினரைத் திரட்டி வந்து அமித் ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர் ‘தாமரை’ ரத்தங்கள்.

* கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியிலும் அமித்ஷா கலந்துகொண்டார். இதற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து 20-ம் தேதி மதியம் வாழை மரங்கள் வெட்டப்பட்டு, அன்றிரவு விமான நிலையம், கலைவாணர் அரங்கத்தின் வாசலில் கட்டப்பட்டன. அமித் ஷா வரும்போது வாழை இலைகள் வாடிப் போயிருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருந்ததாம்.

‘டார்கெட்.... 50’ - ஆபரேஷன் அமித் ஷா!

* மாநிலத்துக்கு வரும்போது பிரதமரை மட்டுமே மாநில முதல்வரும் கவர்னரும் நேரில் சென்று வரவேற்பது மரபு. மத்திய உள்துறை அமைச்சரை வரவேற்பது மரபு இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை வந்திருந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்க விமான நிலையம் சென்றிருந்தார். தி.மு.க-வினர் வரிசையாக வந்து மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், ஆத்திரமடைந்த ஜெயலலிதா பிரதமரிடம்கூட எதுவும் சொல்லாமல் விருட்டெனக் கிளம்பிச் சென்றார். அவர் ஆளுமை அப்படி. ஆனால், உள்துறை அமைச்சரான அமித் ஷாவை வரவேற்க கிட்டத்தட்ட அரை மணி நேரம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, கால்கடுக்கக் காத்திருந்தது, முதல்வர் பதவியின் மாண்பைக் குலைக்கும் மரபை மீறிய செயல். இது ஆச்சர்யத்துடன் விவாதிக்கப்பட்டது.

* ராஜா அண்ணாமலைபுரம் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கிய அமித் ஷாவின் மதிய உணவு மெனு... காரமில்லாத பருப்பு மசியல், இரண்டு சப்பாத்தி, ஒரு கரண்டி பாசுமதி சாதம், பட்டாணி உருளைக்கிழங்கு குருமா, குறைவான எண்ணெயில் வதக்கிய வெண்டைக்காய். உணவின் முடிவில் ஜிலேபிகளையும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமையும் ஹோட்டல் ஊழியர்கள் நீட்டியபோது, ‘‘இப்போதுதான் கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் போகிறீர்களா?’’ என்று கிண்டலாகக் கேட்டுச் சிரித்தாராம் அமித் ஷா.

* துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பி-யுமான ஓ.பி.ரவீந்திரநாத் தன்னைச் சந்தித்தபோது, தமிழகத்தில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் அமித் ஷா. ‘நம் கூட்டணியில் ஜெயித்திருக்கிற ஒரே எம்.பி நீங்கள்தான். அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்று அமித் ஷா கூறியதை பவ்யமாகக் கேட்டுக்கொண்டாராம் ஓ.பி.ஆர்.

‘டார்கெட்.... 50’ - ஆபரேஷன் அமித் ஷா!

* அமித் ஷா, ஓ.பன்னீர்செல்வம் என எல்லோரும் அரசியல் பேசிய அரசு விழாவில், சந்தன மரத்தில் செதுக்கிய விநாயகர் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஐம்பொன்னால் செய்யப்பட்ட நடராஜர் சிலையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமித் ஷாவுக்குப் பரிசளித்தனர்.

* அரசு விழா முடிந்ததும் லீலா பேலஸ் ஹோட்டலில் பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்தார் அமித் ஷா. ‘பா.ஜ.க தனித்துப் போட்டியிட வேண்டும். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் 15, 20 சீட் கொடுத்து நம்மை ஏமாற்றிவிடுவார்கள்’ எனச் சில நிர்வாகிகள் உணர்ச்சிவசப்பட்டனர். ‘தனித்துப் போட்டியிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மூன்றாவது அணியும் சரிவராது. நீங்கள் ஏன் நம் பலத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 50 சீட் கேளுங்கள். 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தலா ஒரு சீட், நாம் வலுவாக இருக்கும் கோவை வட்டாரத்தில் கூடுதல் சீட் என்று கேளுங்கள்’’ என உற்சாகமாகச் சொன்னாராம் அமித் ஷா.

* தென் மாவட்ட நிர்வாகி ஒருவர், “உங்களைப் பார்க்கிறதுக்காக நான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கேன். நான் ஒரு சாதாரண பூத் ஏஜென்ட். உங்களுக்காக இந்த சால்வையை வாங்கி வந்தேன்’’ என்று பட்டு அங்கவஸ்திரத்தை அமித் ஷாவுக்குப் போர்த்தியிருக்கிறார். புன்னகைத்த அமித் ஷா, ‘`நானும் ஒரு பூத் ஏஜென்டாக வாழ்க்கையைத் தொடங்கியவன் தான். உங்கள் அன்புக்கு நன்றி’’ என்று சொன்னாராம். நிர்வாகிகள் கூட்டம் முடியும்வரை, அந்த அங்கவஸ்திரத்தை அமித் ஷா தோளில் இருந்து எடுக்கவில்லை.

* கூட்டத்தை முடித்துவிட்டு, அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் பலரைத் தனியாகச் சந்தித்தபிறகு இரவு உணவை எடுத்துக்கொள்ள 10 மணி ஆகியிருக்கிறது. இட்லியும் கேப்பைப் புட்டும் சாப்பிட்ட அமித் ஷா, வாழைப்பூ ரசத்தை விரும்பி அருந்தியிருக்கிறார்.

* இரவு 11 மணிக்கு அமித் ஷாவை ‘துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். சுமார் மூன்று மணி நேரம் இருவரும் பேசினர். மூன்று வாரங்களுக்கு முன்பு ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியிருந்தார் குருமூர்த்தி. அப்போது ரஜினி பகிர்ந்த பல விஷயங்களை ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் போல அமித் ஷாவிடம் சொன்னார் குருமூர்த்தி. ரஜினி தன் உடல்நிலை குறித்துச் சொன்ன பல உண்மைகளை குருமூர்த்தி விளக்கியபோது, அக்கறையுடன் கேட்டுக்கொண்டார் அமித் ஷா. இந்த விசிட்டின்போது அமித் ஷா - ரஜினி சந்திப்பு நடக்கும் எனப் பலரும் யூகம் செய்திருந்தார்கள். ஆனால், அப்படி ஒரு சந்திப்பு நிகழவில்லை.

* எல்லாச் சந்திப்புகளையும் முடித்துக்கொண்டு அமித் ஷா உறங்கச் செல்ல நள்ளிரவு 2 மணி ஆகியிருக்கிறது என்றாலும், மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிவிட்டார்.

‘டார்கெட்.... 50’ - ஆபரேஷன் அமித் ஷா!

* நவம்பர் 22-ம் தேதி காலையில் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ் தென் மாநிலங்களுக்கான தலைவர் மாரிமுத்து, பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் காலை உணவை எடுத்துக்கொண்ட அமித் ஷா, ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி முடித்தார். ஆர்.எஸ்.எஸ் காரியகர்த்தர்களைத் தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொள்வது குறித்துக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.

*ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை முடித்த கையோடு, விமான நிலையம் வந்த அமித் ஷாவை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழியனுப்பி வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism