Published:Updated:

ஆச்சர்யமா இருக்கே அப்படியா? - “என் டைரியும்... டைம் டேபிளும்!”

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

ஆச்சர்யமா இருக்கே அப்படியா? - “என் டைரியும்... டைம் டேபிளும்!”

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Published:Updated:
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

முக்கியமான அரசியல் நிகழ்வுகள் எந்த ஆண்டில், எந்தத் தேதியில், எந்த நேரத்தில் நடந்தன என்பது வரையில் தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர், தி.மு.க-வின் செய்தித் தொடர்புச் செயலாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவரின் சமூக வலைதளப் பக்கங்களைத் தொடர்ந்து கவனித்துவந்தாலே, இந்திய அரசியல் வரலாறு குறித்த அடிப்படைப் புரிதல் ஒருவருக்குக் கிடைத்துவிடும். எப்படி இந்த அளவுக்கு ஞாபகத்தோடு ஒவ்வொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என அவரிடம் கேட்க, அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள், ஆச்சர்யம்தான்...

“நான் பள்ளியில படிக்கிற காலத்துலருந்து டைரி எழுதிட்டு வர்றேன். அரசியலுக்கு வந்த பிறகும் ஒவ்வொரு நாளும் நடக்குற விஷயங்களை என் டைரியில குறிச்சு வெச்சுடுவேன். அப்படி, 1971-ல இருந்து இன்னைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களா என் வாழ்க்கையில நடக்குற அத்தனை நிகழ்வுகளையும் பதிவு பண்ணிட்டு வர்றேன். அதனாலதான் எந்த நிகழ்வைப் பத்திக் கேட்டாலும் என்னால துல்லியமா பேச, எழுத முடியுது. நான் காமராஜர், நெடுமாறன், கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வைகோன்னு தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர்கள் அத்தனை பேர் கூடவும் நெருக்கமா பழகியிருக்கேன். கலைஞரே சில நேரங்கள்ல என்கிட்ட போன் பண்ணி, முக்கியமான தகவல்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்குவாரு.

ஆச்சர்யமா இருக்கே அப்படியா? - “என் டைரியும்... டைம் டேபிளும்!”

அதுமட்டுமில்லை... ஜெயபிரகாஷ் நாராயணன்கிட்ட இருந்து கத்துக்கிட்ட இன்னொரு பழக்கத்தையும் இன்னைக்கு வரைக்கும் நாள் தவறாம கடைப்பிடிச்சுக்கிட்டு வர்றேன். ஒரு நாள் விடிஞ்சதும், இன்னைக்கு என்னென்ன வேலைகள் செய்யணும், யாருக்கு போன் பண்ணணும், யாருக்கு லெட்டர் போடணும், யாரை நேரில் சந்திக்கணும்னு காலையில 8 மணியிலருந்து நைட் 8 மணி வரைக்கும் ஒரு டைம் டேபிள் ரெடி பண்ணி வெச்சுடுவேன். அதை ஃபாலோ பண்ணித்தான் நடப்பேன். நாற்பது வருஷமா நான் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிச்சுக்கிட்டு வர்றேன். அதனாலதான் என்னோட நேரங்களை மிகவும் பயனுள்ள வகையில பயன்படுத்த முடியுது. ஈ.வி.கே.சம்பத் கிட்டயும் இப்படியொரு பழக்கம் இருந்தது. ஆனா, நான் ஜெ.பி.கிட்ட இருந்துதான் இந்த ஃபார்மேட்டைக் கத்துக்கிட்டேன். பெரும்பாடுபட்டு அவர் கையிலருந்து அந்த ஃபார்மெட் ஸ்லிப்பைக் கைப்பற்றினேன்!”