Published:Updated:

எல்லோரும் நல்லா இருக்கணும் என வேண்டிக்கொள்வேன்! - வானதி சீனிவாசன்

ஆச்சர்யமா இருக்கே அப்படியா?!
பிரீமியம் ஸ்டோரி
ஆச்சர்யமா இருக்கே அப்படியா?!

ஆச்சர்யமா இருக்கே அப்படியா?!

எல்லோரும் நல்லா இருக்கணும் என வேண்டிக்கொள்வேன்! - வானதி சீனிவாசன்

ஆச்சர்யமா இருக்கே அப்படியா?!

Published:Updated:
ஆச்சர்யமா இருக்கே அப்படியா?!
பிரீமியம் ஸ்டோரி
ஆச்சர்யமா இருக்கே அப்படியா?!

“நான் பிறக்கும் முன்பிருந்தே சபரிமலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் என் தந்தை. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு நண்பர்கள், உறவினர்களை அழைத்து, பெரிய விழாபோல நடத்தும் பழக்கமிருந்தது வீட்டில். பொங்கல் கொண்டாட்டம், மார்கழி மாத வழிபாடு, குலதெய்வ வழிபாட்டையும் ஆண்டுதோறும் செய்வோம். கோவை நாயக்கன்பாளையத்தில் இருக்கும் ஐயாச்சாமி கோயிலுக்குக் குடும்பத்தோடு சென்றுவருவதையும் நாங்கள் வழக்கமாகக்கொண்டிருந்தோம். சென்னைக்குப் படிப்புக்காக வந்த பின்னர் வீட்டில் பூஜையறையில் வழிபடுவது, அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடும் பழக்கத்தையும் வைத்திருந்தேன். இப்படி எல்லா வகையிலும் பக்திமயமான சூழலில் வளர்ந்துவந்திருந்தாலும், இந்தக் கிழமைக்கு இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும், இந்த நாளில் இந்த பூஜை செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் மிகத் தீவிர இறை வழிபாட்டில் ஈடுபட்டது கிடையாது.

கணவர் வீட்டிலும் எல்லோரும் இறை வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்கள் என்றாலும், ஆடி மாதத்தில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டும் என் மாமியாருக்காக சுமங்கலி பூஜை செய்வோம். அவ்வளவுதான். வீட்டில் பூஜை அறை இருக்கிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் எல்லைக்குள்ளே வீடு வாங்கிக் குடியிருக்கிறேன் என்றாலும், அங்கு தொடர்ச்சியாகச் சென்று வழிபாடு நடத்தியதெல்லாம் இல்லை. அதேபோல, குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் ஒரு தெய்வத்தை, குறிப்பிட்ட காரணத்துக்காக வழிபட வேண்டும் என்று இதுவரை எந்தக் கோயிலுக்கும் நான் சென்றதில்லை. பணி நிமித்தமாக, அரசியல் நிகழ்ச்சிகளுக்காக நான் செல்லும்போது, அந்தப் பகுதிகளில் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் என்றால் மட்டும் சென்று வழிபடுவேன். மற்றபடி ஒவ்வொரு நாளும் பணியைத் தொடங்கும் முன்னும் ‘எல்லோரும் நல்லா இருக்கணும்’ என வேண்டிக்கொள்வேன். இது தவிர்த்து சிறப்பு வழிபாடுகளிலோ, ஆன்மிகச் செயல்பாடுகளிலோ நான் ஈடுபடுவது கிடையாது.

எல்லோரும் நல்லா இருக்கணும் என வேண்டிக்கொள்வேன்! - வானதி சீனிவாசன்

நான் மட்டுமல்ல, பா.ஜ.க-வில் நிறைய தலைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால், எப்போதும் முற்போக்கு பேசும் தி.மு.க-வினர்தான் பா.ஜ.க-வினரைவிட அதிகமாகக் கோயில்கள், ஆன்மிகச் செயல்பாடுகள் என அதீத கடவுள் பக்தியுடன் இருக்கிறார்கள். இதை அரசியலுக்காகச் சொல்லவில்லை. எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே ஒரு தி.மு.க-காரர் திருப்பணிக்காக ஏதாவது நன்கொடை அளித்திருப்பதைப் பார்க்கிறேன். பெரிய பெரிய கோயில்களின் அர்ச்சகர்களெல்லாம் தி.மு.க-காரர்களின் வீடுகளுக்கே சென்று பூஜைகளைச் செய்துவிட்டு வந்ததாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு இதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். வெளியில் நாத்திகர்கள் என்று முழங்கிக்கொண்டு, உள்ளே வீட்டுக்குள் பெருமாள் படத்துக்குத் தீவிர பூஜை செய்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வினர் என்றாலே `கடவுள் மறுப்பாளர்கள்’ என்பதும், பா.ஜ.க-காரர்கள் என்றாலே `எப்போதும் கோயில், ஆன்மிகச் செயல்பாடுகளில்தான் இருப்பார்கள்’ என்பதும் பொதுவான மனநிலை. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, பா.ஜ.க-வில் இருக்கும் பெரும்பாலானவர்கள் என்னைப் போன்றவர்கள்தான்!’’